For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் ரேங்க் என்ன தெரியுமா?

07:45 PM Mar 21, 2024 IST | admin
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் ரேங்க் என்ன தெரியுமா
Advertisement

லகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நிலையில் . கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.

Advertisement

2012-ல் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த 'Sustainable Development Solutions Network' என்ற நிறுவனம் கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், சுகாதாரம் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த ஆராய்ச்சிகள் 144க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 நெட்வொர்க்குகளில் நடத்தப்பட்டு வருகின்றன. சுமார் 1,700 உறுப்பினர்கள், உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள், Gallup World Poll மற்றும் பல பல்கலைக்கழங்களின் உதவியுடன் இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் முக்கியமாக இந்நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20) உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆய்வு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும், கொலம்பியா பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளும் இந்தப் பட்டியல் தயாரிப்பில் கணக்கில்கொள்ளப்படும்.அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை கனடா பொருளாதார நிபுணர் ஜான் எப் ஹெலிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெப்ரி சாக்ஸ், ஜேன் இமானுவேல் டி நெவி, லாரா பி அகினின் மற்றும் ஷன் வாங் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலிபான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இதில் முதல் 20 இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த இரண்டு நாடுகளும் முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்கா 23-வது இடத்திலும் ஜெர்மனி 24-வது இடத்திலும் உள்ளன. கோஸ்டாரிகா (12), குவைத் (13) ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. ஐ.நா ஆதரவுடன் ஆண்டுதோறும் வெளியாகும் இப்பட்டியலில் இந்தியா இந்த ஆண்டும் அதே 126வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்

பின்லாந்து
டென்மார்க்
ஐஸ்லாந்து
ஸ்வீடன்
இஸ்ரேல்
நெதர்லாந்து
நார்வே
லக்சம்பர்க்
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரேலியா

30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான நாடுகள்

லிதுவேனியா
இஸ்ரேல்
செர்பியா
ஐஸ்லாந்து
டென்மார்க்
லக்சம்பர்க்
பின்லாந்து
ருமேனியா
நெதர்லாந்து
செ குடியரசு

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான நாடுகள்

டென்மார்க்
பின்லாந்து
நார்வே
ஸ்வீடன்
ஐஸ்லாந்து
நியூசிலாந்து
நெதர்லாந்து
கனடா
ஆஸ்திரேலியா
அமெரிக்கா

Tags :
Advertisement