தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பகிர்தல் அறம் !

05:39 PM Apr 21, 2024 IST | admin
Advertisement

"கூந்தல்‌ என்னும்‌ பெயரோடு கூந்தல்‌ எரிசினம்‌ கொன்றோய்‌! நின்‌ புகழுருவினகை; நகையச்‌ சாக நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயமில்‌ ஒரு கை; இரு கை மால்‌!" ( பரிபாடல் 28)

Advertisement

மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்து எடுத்த அமிர்தத்தை தேவர்கள் - அசுரர்கள் பகிர்ந்து உண்பது பற்றிய பிரச்சினை இது. இந்த விவகாரத்தில் திருமாலின் இரண்டு கைகளில் ஒரு கையை தேவர்களுக்கு ஆதரவாக அசுரர்களுக்கு எதிராக நடுவுநிலையிலிருந்து நழுவி வஞ்சகம் செய்த 'நயமில் ஒருகை' என்று பரிபாடல் தீர்ப்பளிக்கிறது. இத்தனைக்கும் 'திருமால் பெருமை' பேசுவது தான் பரிபாடலின் நோக்கம். கடவுள் ஆயினும் அறம் அறம் தான்! அதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை!

பகிர்தல் அறம் பற்றி தமிழ்ச் சமூக விழுமியம் ஏன் இவ்வளவு கறாராக இருக்கிறது? இதற்கான விடை புறநானூற்றில் உள்ளது.

Advertisement

"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே" புறநானூறு: ( 182)

"இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்". .அப்படிப்பட்ட இயல்பு கொண்டோர் சிலர் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் இயங்குகிறது என்பது இப்பாடலின் மதிப்பீடு.

இப்போது இன்னொரு பண்பாட்டுக் கருத்தியலுக்குச் செல்வோம்.

அது தேவர்களைப் போற்றி அசுரர்களைத் தூற்றுவது.‌ அசுரர்களுடன் கூட்டணி அமைத்துப் பாற்கடலை ( !) மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்து எடுத்த அமிர்தத்தை அசுரர்களுக்குத் தராமல் 'ஆட்டைய' போட்டு தேவர்கள் சாப்பிட உடந்தையாக திருமால் இருந்தார். இது தான் புராண மரபு. அது இன்று வரை புழக்கத்தில் உள்ளது என்பது மட்டுமின்றி நியாயப்படுத்தப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு நான்கு கோடி ஆண்டுகளுக்கும் முற்பட்ட 'வாசுகி' பாம்பின் படிமம் ( fossil) குஜராத்தில் கிடைத்திருப்பதாக 'விஞ்ஞானிகள்' கூறுவதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன.

புது டில்லியில் சென்ற ஆண்டு புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட போது அவையின் அகச்சுவரில் தீட்டப்பட்ட ஒரு மாபெரும் 75 அடி நீளம் கொண்ட பித்தளைச் சுவரோவியம் ( Brass Mural) பற்றி செய்தி வெளியானது.‌

இரு வேறு கருத்தியல்கள்...!
இது இன்று நேற்றைய கதை அல்ல!

கடந்த காலம் தான் நம்மைக் கடந்து செல்கிறது மீண்டும் மீண்டும்...!

ஆர். பாலகிருஷ்ணன்

Tags :
Distributive JusticeVishnu Purana
Advertisement
Next Article