தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆவடி தொழிற்சாலையில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

06:58 PM Aug 13, 2024 IST | admin
Advertisement

சென்னை ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகனத் தொழிற்சாலை. ராணுவத்துக்குத் தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை எச்விஎப் தொழிற்சாலை தயாரித்து வழங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப் படைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தின்படி 1965-ம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை மத்திய அரசு நிறுவியது.இங்கு விஜயந்தா, டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி, கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது எச்விஎப். இங்கு வடிவமைக்கப்பட்ட அர்ஜுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் பாராட்டுக்களையும் குவித்தது ஆகும்.இந்த தொழிற்சாலை வளாகத்தில்தான் பீரங்கி வண்டிகளின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை ஆராயும் "நடுவண் ஊர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு" (CVRDE) அமைந்துள்ளது. இந்த பெருமைமிகு சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

Advertisement

காலியிடங்கள் :

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம்7
சிவில் இன்ஜினியரிங்5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்18
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம்7
சிவில் இன்ஜினியரிங்5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்18

பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் :-

 BA., / B.Sc., / B.Com., / BBA / BCA போன்றவை100

கல்வி தகுதி :

  1. பட்டதாரி பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  3. பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் : – கலை, அறிவியல்,  வணிகம் ,  மனிதநேயம் போன்ற BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

சம்பளம் :

பட்டதாரி பயிற்சியாளர்கள்ரூ.9000
டிப்ளமோ (தொழில்நுட்ப நிபுணர்) பயிற்சியாளர்கள்ரூ.8000
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள்ரூ.9000

தேர்வு செயல்முறை :

  1. Shortlisting
  2. Certificate Verification

இவ்வாறு விதமான 2 முறையில் தேர்வு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

கட்டணம் :

விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 29.07.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 19.08.2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம்க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்ளிக் 
Tags :
ApprenticeavadiHVF< jobஆவடிவேலை வாய்ப்புஹெச் வி எப்
Advertisement
Next Article