தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டிஜிட்டல் காண்டம் செயலி ஜெர்மனியில் அறிமுகம்: எதுக்கு தெரியுமா?

09:42 PM Oct 29, 2024 IST | admin
Advertisement

ம்மில் பலர் நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும்.

Advertisement

சில சமயங்களில் செல்போன் கேமிராக்கள் கூட சில செயலிகள் மூலம் தவறாக கையாளப்படுகின்றன. இப்படி பாதுகாப்பற்ற சூழல் நிலவும் ஸ்மார்ட் யுகத்தில் இருந்து விலகி இருக்கவும், அதில் இருந்து தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்கவும் ஜெர்மனி நிறுவனம் புதிய ஆப்-ஐ உருவாகியுள்ளது.ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் (Blly Boy) எனும் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம், தனிப்பட்ட இருவர் (ஜோடி) நெருக்கமாக இருக்கும் போது அவர்களது தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

Advertisement

அதாவது, இந்த ஆப்-பின் பெயரே Comdom எனும் டிஜிட்டல் காண்டம் (ஆணுறை) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன் செய்துவிட்டால் குறிப்பிட்ட அந்த ஸ்மார்ட் போனில் கேமிரா , மைக்ரோபோன் செயல்பாடுகள் முழுதாக தடுக்கப்படும். ப்ளூடூத் ஆப் மூலம் செயல்பட்டு வேறு யாரேனும் அந்த ஸ்மார்ட் போனில் ஊடுருவி வீடியோ எடுக்க முயன்றால் உடனடியாக அலாரம் அடித்துவிடும்படியும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இந்த செயலியை உருவாக்கியவர்கள்.

இந்த செயலியானது தற்போது 30 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியை உபயோகிப்பதன் மூலம் , ஜோடிகள் தனிமையில் இருக்கும் போது யாரும் அவர்களது போன் கேமிராவை, மைக்ரோபோனை ஊடுருவி அதிலிருந்து வீடியோ ரெகார்ட் செய்து விடுவார்களோ என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் நிறுவனம் உறுதியளிக்கிறது. அதனால் தான் இதனை டிஜிட்டல் உலகின் காண்டம் என செல்லமாக அழைக்கின்றனர்.

Tags :
appDigital CondomGermanyLaunched
Advertisement
Next Article