‘பார்ன்ஹப்’ பலான தளத்தின் பல்வேறு முகங்கள்!
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆபாச வலைத்தளமான பார்ன்ஹப் பெண்களை கடத்தி வந்து மிரட்டி ஆபாசப் படங்கள் எடுத்ததையும், அவற்றை அப்பெண்களின் சம்மதமின்றி இணையத்தில் வெளியிட்டதையும் ஒப்புதல் தந்து வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருந்த நிலையில் இதே பார்ன்ஹப் வேறு வேறு பெயர்களில் அதே வேலையைச் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேள்ஸ் டூ பார்ன் நிறுவனம் விளம்பரங்களுக்கான மாடலிங் என்ற போர்வையில் இயங்கியிருக்கிறது. விண்ணப்பித்த இளம் பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை உருவாக்கும் வேலை தரப்பட்டது.இந்தப் பணி ரகசியமாக இருக்கும் என்றும், அவர்களின் காணொளிகள் இணையத்தில் வெளியிடப்படாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. தனி நபர்கள் அல்லது தொலைதூர சந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்தப் பெண்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அந்தக் காணொளிகள் பார்ன்ஹப் உள்ளிட்ட தளங்கள் வழியாக பொதுவெளியில் விநியோகிக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கு நடந்து சம்பந்தப்ப்பட்ட பெண்களுக்கும் பார்ன்ஹப் நிறுவனத்துக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்பட்டிருந்த நிலையில் பார்ன் ஹப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் வேறு பெயர்களிலான இணையத்டில் இன்னமும் வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிலும் இந்த புதுப் பெயர்கள் கொண்ட தளங்களும் பார்ன் ஹப்புக்கு சொந்தமானது எனவும் தெரிய வருகிறது.
இணையத்தில் மலிவாகக் கிடைப்பதில் நல்லதைவிட அல்லாததே அதிகம். அந்த வகையில் ஆபாச தளங்கள் இணையத்தில் புற்றீசலாய் பெருகிக் கிடக்கின்றன. அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து செயல்படும் இந்த ஆபாச தளங்கள், அதிலும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு ஆட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது ஆபாச படங்களில் நடிப்பவர்கள் தொடர்பானது. ஆனால், அப்பட்டமாய் அதற்கான விதிகளை பார்ன்ஹப் மீறியிருப்பது, அமெரிக்க நீதிமன்றங்கள் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தெரிய வந்தது.இலவசம் மட்டுமன்றி கட்டண அடிப்படையில் கல்லா கட்டும் ஆபாச தளங்களின் வரிசையில் பார்ன்ஹப் பல விபரீத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக நிஜமான பாலியல் பலாத்காரங்களை நிகழ்த்தி இருக்கிறது. இதற்காக பெண்கள் கடத்தப்பட்டும், மிரட்டப்பட்டும் பலாத்காரங்களுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் ஏராளமான பெண்களின் சம்மதம் இன்றியே அவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பார்ன்ஹப் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. பார்ன்ஹப் தளத்தின் தாய் நிறுவனமான கனடாவை சேர்ந்த ’ஐலோ’, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி மேலும் பல உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. 2017-2019 இடையே நடந்ததாக சொல்லப்படும் இந்த முறைகேடுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட ஐலோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பீடு தருவதாக இறங்கி வந்தது.
வெளியார் ஏஜென்சிகள் வாயிலாக பெறப்பட்ட இந்த ஆபாச படங்கள் முறைகேடாக எடுக்கப்பட்டவை என தங்களுக்குத் தெரியாது என சாதித்து வந்த ஐலோ, பின்னர் விசாரணை தீவிரமடைந்ததும் அனைத்தையும் அறிந்தே செய்ததாக வாக்குமூலம் தந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் கோரிக்கையின்படி, பார்ன்ஹப் இணையதளத்தில் இருந்து அவை நீக்கப்பட்ட போதும், இணையத்துக்கே உரிய விபரீதமாக வெவ்வேறு போலி தளங்களில் அவை முளைத்து வருகின்றன. இவற்றை அடுத்து விசாரணை அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் ஐலோ இருக்கவும் சம்மதித்துள்ளது.