தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?- சீமான் ஆவேசம்!

07:19 PM Dec 05, 2024 IST | admin
Advertisement

''உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா, எங்களுக்கு இல்லையா?. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் பலரும் பேசிய நிலையில், இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்”என வருண்குமார் ஐபிஎஸ்-சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சண்டிகர் மாநிலத்தில் 5-வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐ.பி.எஸ். ஆதாரங்களோடு விளக்கி பேசினார்.

Advertisement

அவர் பேசுகையில், சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி தான். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம்.இது குறித்து 2 எப்ஐ ஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை . அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை" என்று அவர் பேசியது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.

இதுபற்றி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. வருண்குமார் ஐபிஎஸ் நீண்ட நாள்களாக கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார். புதிதாக எதுவும் சொல்லவில்லை.‌

இவர் நாட்டை ஆளுகிறாரா... எதை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ், தமிழர் என்பது பிரிவினைவாதமா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததே, அப்பொழுது பிரிவினை இயக்கம் என்பது தெரியாதா?. உன் தாய் மொழி எது. உண்மையான தமிழ் தாய்க்கும், தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை சொல்லி இருப்பாரா?. உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா, எங்களுக்கு இல்லையா?.

பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் பலரும் பேசிய நிலையில், இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். வேலையில் சேர்ந்து உறுதிப்பிரமாணம் எடுத்த பொழுது இப்படித்தான் எடுத்தாரா?இதுதான் உன் வேலையா. என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா.இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்” என்று தெரிவித்துள்ளார்

Tags :
IPSseemanvarunkumarசீமான்தீவிரவாதம்வருண்குமார்
Advertisement
Next Article