தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் `பைசன் காளமாடன்` ஷூட் ஸ்டார்ட்!

12:23 PM May 06, 2024 IST | admin
Advertisement

ப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய திரைப்படங்களை வழங்கவுள்ளன. இந்நிலையில் தற்போது தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளம் நட்சத்திர நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டுவருகிறது.

Advertisement

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

Advertisement

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார், எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங் சக்திகுமார், கலை இயக்கம் மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன், , ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், "பைசன் காளமாடன்", அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

Tags :
Applause EntertainmentDhruvVikramfilming 'Bison Kaalamaadan'Mari SelvarajNeelam Studios
Advertisement
Next Article