For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய பட்ஜெட் பற்றிய சுவையான தகவல்கள்!

08:25 AM Jul 23, 2024 IST | admin
இந்திய பட்ஜெட் பற்றிய சுவையான தகவல்கள்
Advertisement

ட்ஜெட் - பெயர்க் காரணம்;

Advertisement

பிரெஞ்சு சொல்லான 'Bougette' என்கிற வார்த்தையிலிருந்து திரிந்து வந்ததுதான் 'பட்ஜெட்'. பிரெஞ்சில் 'பவ்கெட்' என்றால் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவு செலவு குறித்த ஆவணங்களைத் தோலாலான பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

Advertisement

இந்தியாவின் முதல் பட்ஜெட்: கடந்த 1860ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் பட்ஜெட்டை முதல்முறையாக அறிமுகம் செய்தார்.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். நவம்பர் 26,1947 அன்று முதலில் தாக்கல் செய்தார்.

இந்திய பட்ஜெட்டை முதல் முதலாக தாக்கல் செய்த பெண் இந்திரா காந்தி ஆவார்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரதமர்களும், தங்கள் அமைச்சரவையின் நிதியமைச்சர் பதவியை தனியாக யார் பொறுப்பிலும் இல்லாத சமயத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியாவில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தது மொரார்ஜி தேசாய். இவரே இதுவரை அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இந்திய நிதி அமைச்சர் ஆவார். இவருக்கு அடுத்த இடத்தில் எட்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவராக சிதம்பரம் இருக்கிறார்.

பொருளாதார சீர்திருத்தம் செய்யப்பட்ட ஆண்டான 1991இல் மன்மோகன் சிங் தாக்கல் செய்ததுதான் மிக நீண்ட பட்ஜெட். அதில் 18,650 சொற்கள் இருந்தன.

1977ல் ஹெச்.எம் .படேல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் 800 வார்த்தைகளைக் கொண்ட மிகச் சிறிய பட்ஜெட் ஆகும்.

92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ரயில்வே பட்ஜெட் 2017ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டுடன் சேர்ந்து தாக்கல் செய்யப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்ததேதி வரும், மொரார்ஜி தேசாய் 1964ல் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 29 அன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

2001ல் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணிக்கு மாற்றினார். அப்போதிலிருந்து காலை 11 மணிக்கே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2019 ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் வரை பட்ஜெட் குறித்த ஆவணங்கள் அனைத்தும் பெட்டி அல்லது பெட்டியைப்போல இருக்கும் Buckle கொண்ட தோல் பையில்தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் முறையாக 4 சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத் துணியிலான ஃபைலில் நிதிநிலை ஆவணங்களைக் கொண்டு வந்தார்.

* 2020-ல் கோவிட் வந்த பிறகு, அச்சடிக்கப் பட்ட காகிதத்தை விட்டுவிட்டு, டேப்லெட் சாதனம் மூலம் பட்ஜெட் உரையை படிக்கத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2021, 2022, 2023 என்று மூன்று ஆண்டுகளாக டேப்லெட்டில் பட்ஜெட் உரையை படித்து வருகிறார். டேப்லெட் மூலமாகவே பட்ஜெட் உரையைப் படிப்பதன் மூலம், ‘டிஜிட்டல் இந்தியா’வை அழுத்தமாகப் பதியவைத்து வருகிறார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement