For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக அணியை வீழ்த்தி இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

09:11 PM Mar 25, 2024 IST | admin
டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக அணியை வீழ்த்தி இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி
Advertisement

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ( ஜேஎன்யு) மாணவர் பேரவை தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்பட நான்கு பதவிகளிலும் ஐக்கிய இடது கூட்டணி பாஜக அணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலின் தாக்கம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கலக்கம் பாஜகவில் ஏற்பட்டுள்ளது.

Advertisement

தலைநகர் டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகம் பல இளம் அரசியல் தலைவர்களை உருவாக்கி வருகிறது. இங்கு நடைபெறும் மாணவர் பேரவை தேர்தல் அகில இந்திய அளவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. என்றால் இந்த தேர்தலில் எந்த அமைப்பு வெற்றி பெறுகிறதோ அதைச் சேர்ந்த இளைஞர்கள் நாடு முழுவதும் அதை பிரதிபலிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பல்கலைக்கழகத்தில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் மாணவர் சங்கத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

இத்தேர்தலில் அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டிஎஸ்எப்), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எப்) ஆகியவற்றைக் கொண்ட ஐக்கிய இடது கூட்டணி ஓர் அணியாகவும், ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஓர் அணியாகவும் போட்டி போட்டன. இத்தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.

இந்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மாணவர் சங்க தலைவர் தேர்தலில் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் உமேஷ் அஜ்மீரா 1,676 வாக்குகள் பெற்றார். கடந்த 1996-97ல் இடதுசாரிகள் சார்பில் பட்டி லால் பைரவா மாணவர் சங்கத் தேர்தலில் தலித் தலைவராக வென்றிருந்தார். அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து பீகாரின் கயாவைச் சேர்ந்த தனஞ்செய் இடதுசாரி கட்சியிலிருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பட்டியல் இன மாணவர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு பாஜக ஆதரவு அணியை வீழ்த்தி இடதுசாரி அணி வெற்றி பெற்றதற்கும் நாடு தழுவிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் வருகிற தேர்தலில் நான் ஒரு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்குப்பதிவில் மாணவர்கள் ஆர்வம்

நேற்றைய தேர்தலில் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன.கடந்த 2012ல் 60% ,2013-ல் 55 சதவீதமும், 2015-ல் 55 சதவீதமும் 2016 -ல் 59 சதவீதமும், 2018ல் 67.8%, 2019-ல் 67.9 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தலில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் சங்கம் அகில இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டனர். அவர்களில் அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவரான தனஞ்சய் பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement