தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகளின் விபரம்!

10:23 PM Nov 02, 2018 IST | admin
Advertisement

தீபாவளி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

வருகின்ற 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதையடுத்து, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 21 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது.

Advertisement

ஆனால், தற்போது 5-ஆம் தேதியும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை யடுத்து, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த அதே அட்டவணைப்படி இன்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகளின் விபரம்:

ஈசிஆர் மார்க்கம்:

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

தாம்பரம் சானடோரியம்(MEPZ):

விக்கரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்:

காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.

மாதவரம் சிறப்பு பேருந்து நிலையம்:

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

Advertisement
Next Article