தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை? -கத்தார் கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சி

06:28 PM Oct 26, 2023 IST | admin
Advertisement

ஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த பல மாதங்களாக கத்தார் சிறையில் உள்ள கத்தார் எமிரி கடற்படைக்கு பயிற்சி மற்றும் பிற சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் கத்தாரில் பணிபுரியும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது.

Advertisement

8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமாண்டர் பூர்ணேந்து திவாரியும் (ஓய்வு பெற்றவர்) ஒருவர். 2019 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து வெள்நாடு வாழ் இந்தியர்களுக்கான விருதைப் பெற்றார். அவர் இந்திய கடற்படையில் பணியாற்றியபோது, ​​பெரிய போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கியவராக்கும்.. கைது செய்யப்பட்ட அதிகாரிகள், இத்தாலியிடமிருந்து மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் கத்தாரின் இரகசியத் திட்டத்தின் விவரங்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதே வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கத்தாரின் சர்வதேச ராணுவ நடவடிக்கைகளின் தலைவர் ஆகியோரும் கைதாகி மரணத் தணடை விதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தாரின் முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக எங்களுக்கு முதல் தகவல் கிடைத்துள்ளது. 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.அதை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், தூதரக உதவி மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் 8 பேருக்கு விதித்துள்ள மரண தண்டனை தொடர்பாக கத்தார் அரசுடன் பேச இருப்பதாகவும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags :
8 formerdeath sentenceIndian Navy officersIsreal spyQatar court
Advertisement
Next Article