For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டியர் - விமர்சனம்!

07:45 AM Apr 12, 2024 IST | admin
டியர்   விமர்சனம்
Advertisement

ம் வாழ்வில் சந்தோஷம் தருவது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒன்றைக் கூறுவர். ஆனால், பெரும்பாலானோர் கூறுவது, ‘நிம்மதியான தூக்கம்’ என்பதுதான். காரணம், தூக்கத்தை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை நான் கூறவில்லை, பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வில் கண்டறிந்து கூறிய உண்மை. பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி உலகில் மன நிம்மதியுடன் வாழ்கிறவர்கள் இரவில் நன்கு தூங்கி எழுந்தவர்கள்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளமையில் நன்றாகத் தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுபூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதேசமயம் ‘தூக்கமே வரல' என புலம்புபவர்கள் ஒருபக்கம், வருகின்ற தூக்கத்தை ஓரம் வைத்துவிட்டு முகநூலிலும், ஓடிடி தளங்களிலும் கண்கள் சிவக்க களித்திருப்பவர்கள் ஒரு பக்கம் என, தூக்கத்தை துச்சமாய் எண்ணுகிறது தற்போதைய டிஜிட்டல் உலகம். சிலர் சீக்கிரமே தூங்கச் சென்றாலும் ஆழமான தூக்கத்திற்குள் செல்லாமல் தவிக்கிறார்கள். இச்சூழலில் குறைட்டை விடும் ஓர் அழகான பெண்ணையும், குண்டூசி விழும் சத்தம் கேட்டாலே தூக்கம் பறி போய் விடும் ஓர் இளைஞனையும் வைத்து தீபா – அர்ஜுன் என்ற கேரக்டர்களின் ஃப்ர்ஸ்ட் லெட்டர்களை கோர்த்து டியர் என படத்துக்கு டைட்டில் வைத்திருப்பதிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார்கள்.

Advertisement

அதாவது டிவி சேனல் ஒன்றில் நியூஸ் ரீடராக இருக்கும் அர்ஜுனுக்கு ( ஜிவி பிரகாஷ்) வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின் றனர். ஆனால் செட்டிலாகாமல் திருமணம் செய்வதைப் பற்றி யோசித்தாலும் குடும்பத்தினர் தீபாவை ( ஐஸ்வர்யா ராஜேஷ்) பெண் பார்க்க அழைத்து செல்கின்றனர். பார்த்தவுடன் அவரை அர்ஜுனுக்கும் பிடித்து விடுகிறது. திருமணம் முடிந்த பிறகு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நாயகி தீபா தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் கொண்டவராக இருப்பது அர்ஜுனுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. இதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தீபாவை விவாகரத்து செய்ய அர்ஜுன் கோர்ட்டில் வழக்கு தொடுகிறான் அதன் பிறகு பல்வேறு திருப்பங்கள் நிகழ்கின்றன இறுதியில் நடப்பது என்ன என்பதுதான் டியர் ஸ்டோரி.

Advertisement

டிவி நியூஸ் ரீடர் ரோலுக்காக ஜிவி பிரகாஷ் யாரிடமோ பயிற்சி எல்லாம் எடுத்து குரலையும், மாடுலேஷனையும் , உடல் மொழியையும் பக்காவாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்கிறார். . ஆனால் ஹேர் ஸ்டைலில் கவனம் காட்டாததால் நாடகத்தன்மை வந்து விடுகிறது.ஆனாலும் பெரிய சேனலில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற அவரது கனவு ஐஸ்வர்யா ராஜேஷ் விட்ட குறட்டையால் தூள் தூளான நிலையில் அந்த வெறுப்பை, தவிப்பை பதற்றத்தில் காட்டி நடித்து ரசிக்கவே வைக்கிறார். குறட்டை நாயகி தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தின் முக்கால்வாசி பகுதியை தூக்கிச் சுமக்கிற வேலையை புரிந்து செவ்வனே தன் பங்களிப்ப்பை வழங்கி கவர்கிறார். கணவனின் வெறுப்பை எதிர்கொள்வதில் காட்டுகிற பக்குவமாகட்டும், புகுந்த வீட்டாருடன் அன்பாகப் பழகும் விதமாகட்டும் காட்சிக்கு காட்சி பாஸ் மார்க் வாங்குபவர் ரொமான்ஸிலும் அடடே சொல்ல வைக்கிறார்..@

ஹீரோவின் அம்மா ரோலில் வரும் ரோகிணிக்குப் பிரிந்து சென்ற கணவனை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம். இண்டர்வெல்லு பின் ஹாஸ்பிட்டலில் பெட்டில் இருந்து கொண்டு, கதையின் போக்கை தன்னுடைய அசுரத்தனமான நடிப்பினால் மடை மாற்றி பலே சொல்ல வைத்து விடுகிறார். ஜிவியின் அண்ணனாக வரும் காளிவெங்கட்டிற்கு, ஏகப்பட்ட படங்களில் நாசரும், சில படங்களில் பிரகாஷ்ராஜும் செய்த ரோல். சிறிய வயதிலேயே வேலைக்குப் போய்… தம்பியைப் படிக்க வைத்து… அம்மாவை கவனித்து என்று மூத்த மகனுக்குரிய இலக்கணத்துடன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கடு கடு முகம் மற்றும் சொற்களால் கட்டுக்குள் வைத்திருக்கும் கதாபாத்திரத்தின் ஆழமறிந்து பர்ஃபெக்டாக செய்து அசத்துகிறார். . ஹீரோயின் அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு ரோலே ரசிக்க வைக்கிறது. படத்தின் ஒட்டு மொத்த ஆண் கதாபாத்திரங்களில் ஐடியலாகக் கொள்ள வேண்டிய ஒற்றை ஆண் கதாபாத்திரமாக மனதில் ஓங்கி நிற்கிறார். குழந்தை வேண்டாம் என்று சொல்லும் மகளிடம் அவள் முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுப்பதிலும், அண்டை அயலாரின் வார்த்தைகளைச் சிறிதும் மதிக்காத ஆண்மையிலும் அசரடிக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் அன்பையே தன் கணவன் மேல் அதிகாரமாக வெளிப்படுத்தும், அக்கறையைக் கோபமாக மகள் மேல் வெளிப்படுத்தும் தாய்மார்களை நினைவுகூர செய்கிறார். ஏற்கெனவே சொன்னது போல் அண்ணியாக வரும் நந்தினி அடுத்தவர்களின் வசனத்திற்கு கொடுக்கும் உடல்மொழியில் கூட சர்வ சாதாரணமாகச் சதமடிக்கிறார். இப்படி ஒட்டு மொத்தப் படத்தையும் நடிகர் நடிகைகள் பட்டாளம் போட்டி போட்டுக் கொண்டு தாங்கி ஒரு படி உயர்த்தி விடுகிறது.

கேமராமேன் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ஊட்டி, இடுக்கி என்ற பயணப்பட்டு படத்திற்கு குளிரூட்டி இருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் இணைந்து ஒலித்து இருக்கிறது. பாடல்களும், இசையும் கவனிக்க வைத்திருக்கின்றன. ஆனால், நாயகன், ஜிவியைக் குடிக்க வைத்து சேர்த்திருக்கும் பாட்டு தேவையா என்று வாய்விட்டு கேட்க வைத்து விடுகிறது.

உப்புச் சப்பில்லாத சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இப்போது கணவனும் மனைவியும் விவாகரத்து கேட்டு நிற்பது வாடிக்கையாகிவிட்டது.. அதையும் மீறி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை சொல்ல குறைட்டையை அடிப்படையாக வைத்திருப்பது குட் நைட் படத்தை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தாலும் இந்த வெகேஷனில் ஒரு ஃபேமிலி எண்ட்டர்டெயினரை வழங்கி கவர்ந்து விட்டதென்னவோ நிஜம் ..

மொத்தத்தில் இந்த டியர் - அட்ராக்‌ஷன் முவீ

மார்க் 3.25/5

Tags :
Advertisement