For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கோமியம் அரு மருந்து: ஐஐடி டைரக்டர் காமகோடி!

08:23 PM Jan 18, 2025 IST | admin
கோமியம் அரு மருந்து  ஐஐடி டைரக்டர் காமகோடி
Advertisement

த்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுவின் கோமியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் பசுவின் கோமியம் மனிதர்கள் நேரடியாக பயன்படுத்தத் தகுந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு நேரடி தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் எருமை மாட்டின் கோமியத்தில் அதிகளவிலான நுண்ணுயிரிகள் புலப்பட்டதாக ஆய்வில் முடிவில்  தெரிவிக்கப்பட்டும் இருந்தது.

Advertisement

இந்நிலையில்சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மாம்பலம் கோ சம்ரக்ஷண சாலாவின் 49-வது மாட்டுப்பொங்கல் விழா கடந்த ஜன.16-ல் நடைபெற்றது. இதில், காமகோடி பேசியது இதோ:

Advertisement

`கன்றுக்குக் கொடுத்ததுபோக மீதமுள்ளதை உலகிற்குக் கொடுக்கிறது பசு. வைக்கோல், புல், கழநீர் என அனைத்தையும் உண்டு நமக்குப் பால் தருகிறது பசு. பாலில் இருந்து தயிர், வெண்ணெய், நெய் எனப் பலவும் கிடைக்கிறது. இந்த மாதிரியான ஒரு முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைப்போல வேறு எந்த ஒரு முதலீட்டிலும் கிடைக்காது.

கோமியமும், சாணமும் நமக்கு மிகப்பெரிய இயற்கை உரம். பஞ்சகவ்யம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட பல இயற்கை உரங்கள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது பூச்சி விரட்டியே தவிர, பூச்சிக்கொல்லி அல்ல. விபூதி, கொசு விரட்டி உள்ளிட்ட பல பொருட்கள் இதில் இருந்து கிடைக்கின்றன.

கோ சம்ரக்‌ஷணத்தால் மனிதர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. நல்ல வாழ்வை நமக்கு அளிப்பதற்கு கோ (பசு) மிக முக்கியம் என்பதைப் பல அறிவியல் கோட்பாடுகள் நமக்கு விளக்குகின்றன. நான் இயற்கை விவசாயி என்பதால் அது குறித்துப் பேச எனக்கும் கொஞ்சம் தகுதி இருக்கிறது.

ஒரு பெரிய சன்யாசிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கோமியத்தைக் குடித்தார். 15 நிமிடங்களில் அவரது காய்ச்சல் சரியானது. பாக்டீரியா, புஞ்சையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு கோமியம் அற்புதமான மருந்து. இதன் மருத்துவ குணங்களை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags :
Advertisement