For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விண்ணில் பாயப் போகும் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் -கவுண்டவுன் தொடங்கியது !

12:32 PM Dec 31, 2023 IST | admin
விண்ணில் பாயப் போகும் பி எஸ் எல் வி  சி 58 ராக்கெட்  கவுண்டவுன் தொடங்கியது
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி.,- சி 58 ராக்கெட் நாளை ஜனவரி 1ம் தேதி, திங்கட்கிழமை காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ' நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நம் நாட்டின் இஸ்ரோ 2024 ஆண்டின் முதல் நாளிலேயே பிஎஸ்எல்வி சி-58 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட்செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., துாரம் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ்-ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் . இதன் ஆயுட்காலம், 5 ஆண்டுகள். தற்போது ராக்கெட், செயற்கைக்கோள் பாகங்கள் ஒருங்கிணைப்பு, சோதனை ஒட்டம் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் இன்று டிசம்பர் 31 தொடங்கியது. பிஎஸ் 4 இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மட்டும் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் புவியை வலம் வந்து அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். அதே போன்று நாளை ராக்கெட் ஏவப்படுவதையடுத்து பழவேற்காடு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement