For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

05:36 PM Oct 31, 2023 IST | admin
காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு     தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Advertisement

மிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நஅகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதற்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதை வீணாகாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.

இதன்படி மத்திய அரசு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நவம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது. . மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர்அறிவுறுத்தியுளளார்.

Tags :
Advertisement