தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோபா அமெரிக்கா கோப்பை: மீண்டும் வென்றது அர்ஜெண்டினா!

08:50 PM Jul 15, 2024 IST | admin
Advertisement

கோபா அமெரிக்கா 2024 கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இன்று மோதின. 28 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றிருந்த கொலம்பியா அணியும், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும் பலப்பரீட்சை நடத்தியதால் இந்த போட்டி, உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

ஆட்டம் துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். இந்தப் போட்டியின் 36-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பந்தை அடிக்க முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகக் களத்தில் இறங்கிய மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர்.

Advertisement

சில நிமிடங்களுக்குப் பிறகு களத்திற்குத் திரும்பிவந்து தொடர்ந்து ஆட முயன்றார். ஆனால் அவரது காயம் இன்னும் மோசமானது. அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. அதனால் ஆடுகளத்தை விட்டு வெளியேறி விட்டார். தன்னால் போட்டியில் தொடர்ந்து ஆட முடியவில்லை, கோல் அடிக்க முடியவில்லை என்பதை எண்ணி அழுது விட்டார்.

அச்சூழலில் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. இதனால் 90 நிமிடங்களுக்கு பிறகு 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லாட்டாரோ மார்ட்டினீஸ் லாவமாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் பின்னர் பதில் கோல் அடிக்க கொலம்பியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.மேலும் ஐந்து நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 16வது முறையாக கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினா அணி சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 5 கோல்கள் அடித்த மார்ட்டினீஸ், தங்கக்காலனிக்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
ArgentinacolombiaCopa America Cup
Advertisement
Next Article