For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அரசியல் சாசன (சம்விதான் திவஸ்) தினமின்று!- - முழு விபரம்!

07:30 AM Nov 26, 2023 IST | admin
அரசியல் சாசன  சம்விதான் திவஸ்   தினமின்று     முழு விபரம்
Advertisement

ந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய - மாநில - யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அலுவலகங்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நிதி பற்றிய விதிகள் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் என ஒவ்வொரு செயல்பாடுகளையும், அங்குலம் அங்குலமாக மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ள ஒரு கட்டளையாகும். இவை அனைத்தையும் போல ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கி இருக்கக்கூடிய உரிமைகள், என்ன கடமைகள் என்ன என தெள்ளத் தெளிவான வரையறைகளும் இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர அரசு மறுக்கக்கூடாது என பிரிவு 14-ன் படியும் சமயம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும், எந்த குடிமகன் இடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது என பிரிவு 15-லும் என வகுத்ததோடு சுதந்திரமாக சிந்திப்பதற்கும், பிரிவு 19 உட்பிரிவு ஒன்றின் கீழ் பரந்துபட்ட சுதந்திரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு நழுவி இருப்பது தான் நல்லுலகம் போற்றும் இந்திய அரசியல் சாசனம்.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முனவைக்கப்பட்டது. பிறகு 1936 , மற்றும் 1939- இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்சில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைத்தது.

Advertisement

அதை அடுத்து 1946 மே மாதம் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 ஜூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 டிசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் 1947 ஆகஸ்ட் 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

நம்மிலிருந்து பிரிந்த பாகிஸ்தானும் அரசியல் சாசனம் எழுதியது. ஆனால் பல முறை நொறுங்கிப்போயிற்று. ஜனநாயக ஆட்சிகளுக்கும் ராணுவ ஆட்சிகளுக்கும் இடையே இன்னமும் அந்நாடு கட்டிப்புரள்கிறது ஆனால் நம்முடைய அரசியல் சாசனம் இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. மக்கள் ஆட்சியை காக்கிறது. காரணம், நம்நாட்டில் அரசியல் சாசனத்தை எழுப்பியவர்களுக்கு இருந்த அறிவுத்திறன், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள அழுத்தமான பிடிப்பு, தொலைநோக்கு பார்வை. ஆகியவையே.

தமிழகத்தை சேர்ந்த அல்லாடி கிருஷ்ணமாச்சாரி ஐயர், என் கோபாலசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் ஏழு பேர் கொண்ட குழு சாசனத்தை தயாரிக்க ஆரம்பித்தது. வரைவு குழுவிற்கே தலைமை என்ற பொறுப்பை ஏற்றவர் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார். குழுவில் இருந்த சிலர் ஒத்துழைப்பு தராமல் பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்தியபோது அம்பேத்கார் ஓயாமல் உழைத்த உழைப்பு, அன்றைய அரசியல் ஆச்சர்யம்

பல நாட்டு அரசியல் சாசனைங்களை அலசி ஆராய்ந்து எவையெல்லாம் நமக்கு அவசியம் என்று சுமார் மூன்றாண்டுகள் பாடுபட்டு ஷரத்துக்களை உருவாக்கியது அரசியல் சாசன குழு. அப்படிப்பட்ட சாசனம் முழுமை பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் நவம்பர் 26, 1949

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை பற்றிய சில தகவல்கள்:

🇮🇳 அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தலைவன், குடியரசு தலைவர்.மத்திய அமைச்சரவை, அதற்கு தலைமை ஏற்கும் பிரதமர், ஆளுநர்கள், மாநில ஆட்சிகள். நீதிமன்றங்கள் என அனைத்துக்குமே உயிர் நாடி இந்த அரசியல் சாசனம் தரும் அதிகாரம்தான்.

🇮🇳 சாசனம் படைக்கப்பட்டபின் அதில் ஜனநாயத்தின் விருப்பத்தின் பேரில் பல திருத்தங்களை இந்தியா கண்டுள்ளது. பட்டியலினத்தவர்க்கு இட ஒதுக்கீடு மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் சீரமைப்பு , கட்சித்தாவல் தடை, வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு என நிறைய உண்டு.

🇮🇳 அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.

🇮🇳 பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

🇮🇳 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🇮🇳 அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

🇮🇳 இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே 🇮🇳கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.

🇮🇳 கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

🇮🇳 அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

🇮🇳 இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.

🇮🇳இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement