For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி கடல் நீரில் மூழ்கி வழிப்பட்ட துவாரகா நகரம் - கம்ப்ளீட் ரிப்போர்ட்! & வீடியோ

06:43 PM Feb 25, 2024 IST | admin
பிரதமர் மோடி கடல்  நீரில் மூழ்கி வழிப்பட்ட துவாரகா நகரம்   கம்ப்ளீட் ரிப்போர்ட்    வீடியோ
Advertisement

ம் நாட்டில் உள்ள மிக புனிதமான நகரங்களில் ஒன்று துவாரகா. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்து, ஆட்சி செய்ததாக சொல்லப்படும் நகரம். இந்த நகரம் கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக சொல்லப்படுகிறது. தனது மாமனான கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு, துவாரகையின் மன்னனாக முடி சூடிய கண்ணன், வைகுண்டத்திற்கு திரும்புவதாக முடிவு செய்யும் வரை துவாரகை நகரிலேயே வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது. இப்பேர்பட்ட துவாரகா கோயிலில்  பிரதமர் மோடி பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து துவாரகாதீஷ் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

Advertisement

துவாரகா நகரத்தின் பிரதான கோயிலான இந்த துவாரகதீஷ் கோயில் ஜகத் மந்திர் (உலக கோயில்) என்றும் சிறப்புப்பெயரை பெற்றுள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் ஆதி அமைப்பு ஷீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநபி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் சொந்த ராஜ்ஜியமான துவாரகாபுரி மஹாபாரதப்போர் முடிவுக்குப்பின்னர் நீரில் மூழ்கியதாகவும் அதற்கடுத்த காலகட்டத்தில் இந்த கோயில் எழுப்பப்பட்டதாகவும் ஐதீக நம்பிக்கைகள் நிலவிவருகின்றன. தற்போது ஜகத் மந்திர் கோயில் வளாகத்தில் காணப்படும் கலாபூர்வமான கட்டமைப்புகள் 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. 43 மீ உயரமுடைய இந்த கோயில் கோபுரமும் அதில் சந்திர சூரிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் 10 கி.மீ தூரத்திலிருந்தே நன்றாக தெரிகின்றன. மிருதுவான சுண்ணாம்புக்கல் பாறைகளால் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்க வாசல் எனும் நுழைவாயில் மற்றும் மோட்ச வாசல் எனும் வெளியேறும் வழி ஆகிய பிரத்யேக வாசல் அமைப்புகளை இது கொண்டிருக்கிறது. காலை 7மணி முதல் மாலை 9 .30 வரை இந்த கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது. மதியம் 12.30 முதல் 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

Advertisement

துவாரகை நகரில் துவாரகாதீஷ் எனப்படும் ஜகத் மந்திர், குஜராத்தில் உள்ள கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இது முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்றாகவும், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. மகிழ்ச்சியான தேசத்தின் தலைநகராக துவாரகை விளங்கியது. கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் 2200 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் வஜ்ரனபா என்பவரால் கட்டப்பட்டதாகும். கடலில் இருந்து கிருஷ்ணரால் மீட்கப்பட்ட நிலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.துவாரகா எனும் பெயரிலுள்ள 'த்வார்' என்பது வாசலை குறிக்கிறது.

துவாரக என்பதற்கு பிரம்மனை அடையும் வாசல் என்பது பொருளாகும். வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் இந்த துவாரகா நகரம் முக்கியமான புனித நகரமாக வணங்கப்படுகிறது. இங்குள்ள ஜகத்மந்திர் எனும் கோயிலில் த்வாரகாதீஷ் எனும் கிருஷ்ணரின் அவதாரம் வீற்றிருக்கிறது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஷ்வர ஜோதிர்லிங்கம் இந்த துவாரகா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பேட் துவாரகா இந்த இடத்தில்தால் கிருஷ்ணர் தனது இனத்தார்க்கான ராஜ்ஜியத்தை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமின்றி துவாரகாதீஷ் கோயிலைச் சுற்றியுள்ள புராணக்கதைகள் கிருஷ்ணரின் கதைகளில் நுணுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்து புராணங்களின்படி, துவாரகா கிருஷ்ணரின் ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. தனது மாமா, கொடுங்கோல் மன்னன் கன்சாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மதுராவிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு, பகவான் கிருஷ்ணரால் இந்த நகரம் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துவாரகையின் கட்டுமானம் ஒரு பரலோக நிகழ்வு என்று நம்பப்படுகிறது, ஏனெனில் கிருஷ்ணர் தெய்வீக கட்டிடக் கலைஞர் விஸ்வகர்மாவை நகரத்தை கட்ட அழைத்தார். துவாரகை பிரமாண்டமான அரண்மனைகள் மற்றும் தெய்வீக கட்டிடக்கலை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பீரமான மற்றும் செழுமையான நகரம் என்று புராணக் கதை கூறுகிறது. துவாரகாதீஷ் கோயில், இந்த புராண நகரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, கிருஷ்ணர் தங்கியிருந்து ஆட்சி செய்த புனித தளமாக கருதப்படுகிறது. இப்பேர்பட்ட துவாரகா நகரம் மூழ்கியது தொடர்பாக பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளில் அரபிக்கடலில் நீருக்கடியில் பழங்கால நகரம் மூழ்கியதற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் துவாரகை இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். நேற்றும், இன்றும் குஜராத் உள்பட நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் உள்பட 5 இடங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைளை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று பிரதமர் மோடி துவாரகா நகர் மூழ்கியதாக கூறப்படும் இடத்துக்கு சென்று பூஜை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் காவி உடை அணிந்து பயணித்தார். அப்போது கடவுள் கிருஷ்ணருக்கு மயிலிறகு விருப்பமான ஒன்று என்பதால் பிரதமர் மோடி தனது கையில் மயிலறகு கொண்டு சென்றார். அதன்பிறகு ஆழ்கடலில் பிரதமர் மோடி ‛ஸ்கூபா டைவிங்' கருவிகளை உடலில் பொருத்தி கடலுக்குள் குதித்தார். பிற ஸ்கூபா டைவிங் வீரர்கள் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பாக உடன் சென்றனர்.ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்றனர். அங்கு பிரதமர் மோடி தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement