தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வந்தாச்சு :“தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்”!

06:32 PM Oct 24, 2024 IST | admin
Advertisement

லையேற்றத்தின் மீது பலரும்  ஆர்வம் கொண்டு, மலையேறத் தொடங்கியுள்ளனர். தமிழில் மலையேற்றம் என்று கூறினாலும் ஆங்கிலத்தில் இதை Walking, Hiking, Trekking எனப் பலவகையாகப் பிரிக்கின்றனர்.அதாவது, Walking என்பது 1- 4 கி.மீ. தூரம் சரியான பாதை இருக்கும் பகுதியில் நடப்பது. Hiking என்றால் 4 மணி நேர தூரத்தில் இருந்து ஒரு நாளுக்குள், குறைவான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏறி, இறங்கிவிடும் வகையில் மலையேறுதல். Trekking என்றால் சற்று பெரிய் பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் என சில அத்தியாவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு, இரண் முதல் சில நாள்கள் வரை, முறையான பாதை இல்லாத மலையில் ஏறுவது. இப்படி ஏறி இறங்குவதால் அடையும் பலங்கள் எக்கச்சக்கம். இந்நிலையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில் “தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்” எனும் திட்டத்தையும் அதற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று துவக்கி வைத்துள்ளார்.

Advertisement

மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள் TrekTamilnadu.com எனும் தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் மலையேற முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

TrekTamilnadu என்ற மலையேற்ற இணையதளத்தில் பெயர் , மொபைல் எண், இ-மெயில் முகவரி கொடுத்து உள்ளீடு செய்து கணக்கு துவங்க வேண்டும். அதன் பிறகு எளிதான மலையேற்ற பகுதிகள், சற்று கடினமான மலையேற்ற பகுதிகள், கடினமாக மலையேற்ற பகுதிகள் என 3 வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதி சுற்றுலா தளங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன

அதில், தென்காசி தீர்த்தப்பாறை, நீலகிரி , கோவை, திண்டுக்கல், திருப்பூர் , கிருஷ்ணகிரி , சேலம் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலையேற்ற தூரம் , அந்த பகுதிகள் கொண்டு கணக்கிட்டு ரூ.500 முதல் ரூ.5000 வரையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நாம் எந்த பகுதியை தேர்வு செய்கிறோமோ, அந்த மலைப்பகுதி தூரம் என்ன.? கால அளவு, அங்கு நாம் பார்க்கும் வன விலங்குகள் என்னென்ன ,வழிகாட்டு நெறிமுறைகள் என எல்லாம் அதில் பதியப்பட்டு இருக்கும். அதனை அறிந்து கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

மலையேற்றத்தின் மீது ஆர்வம்கொண்டு, மலையேறத் தொடங்கியுள்ளனர். தமிழில் மலையேற்றம் என்று கூறினாலும் ஆங்கிலத்தில் இதை Walking, Hiking, Trekking எனப் பலவகையாகப் பிரிக்கின்றனர்.அதாவது, Walking என்பது 1- 4 கி.மீ. தூரம் சரியான பாதை இருக்கும் பகுதியில் நடப்பது. Hiking என்றால் 4 மணி நேர தூரத்தில் இருந்து ஒரு நாளுக்குள், குறைவான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏறி, இறங்கிவிடும் வகையில் மலையேறுதல். Trekking என்றால் சற்று பெரிய் பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் என சில அத்தியாவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு, இரண் முதல் சில நாள்கள் வரை, முறையான பாதை இல்லாத மலையில் ஏறுவது. இப்படி ஏறி இறங்குவதால் அடையும் பலங்கள் எக்கச்சக்கம். இந்நிலையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தற்போது மலையேற்ற விரும்பிகள் பயன்பெரும் வகையில் “தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்” எனும் திட்டத்தையும் அதற்கான புதிய இணையதளத்தையும் வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று துவக்கி வைத்துள்ளார்.

மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள் TrekTamilnadu.com எனும் தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளத்தில் பதிவு செய்து, உரிய அனுமதி மற்றும் மலையேற முறையாக பயிற்சி பெற்ற பழங்குடியின மற்றும் மலைகிராமங்களில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் மலையேறலாம். இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

TrekTamilnadu என்ற மலையேற்ற இணையதளத்தில் பெயர் , மொபைல் எண், இ-மெயில் முகவரி கொடுத்து உள்ளீடு செய்து கணக்கு துவங்க வேண்டும். அதன் பிறகு எளிதான மலையேற்ற பகுதிகள், சற்று கடினமான மலையேற்ற பகுதிகள், கடினமாக மலையேற்ற பகுதிகள் என 3 வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதி சுற்றுலா தளங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன

அதில், தென்காசி தீர்த்தப்பாறை, நீலகிரி , கோவை, திண்டுக்கல், திருப்பூர் , கிருஷ்ணகிரி , சேலம் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலையேற்ற தூரம் , அந்த பகுதிகள் கொண்டு கணக்கிட்டு ரூ.500 முதல் ரூ.5000 வரையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
நாம் எந்த பகுதியை தேர்வு செய்கிறோமோ, அந்த மலைப்பகுதி தூரம் என்ன.? கால அளவு, அங்கு நாம் பார்க்கும் வன விலங்குகள் என்னென்ன ,வழிகாட்டு நெறிமுறைகள் என எல்லாம் அதில் பதியப்பட்டு இருக்கும். அதனை அறிந்து கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

Tags :
adventurenaturesustainablrtraveltamilnadutrekkingtrektamilnaduwildnature
Advertisement
Next Article