For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கல்லூரிப் படிப்பு: கட் ஆஃப் எதற்கு அதிகரிக்கும்/குறையும்?

07:12 PM May 07, 2024 IST | admin
கல்லூரிப் படிப்பு  கட் ஆஃப் எதற்கு அதிகரிக்கும் குறையும்
Advertisement

மிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்விலும் மதிப்பெண்களை பொறுத்தவரை வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி சதவீதம் அதிகம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இயற்பியலில் 179 சென்டம் குறைந்துள்ளது. வேதியியலில் 3438 சென்டம் குறைந்துள்ளது. கணிதத்தில் மட்டும் 1897 சென்டம் அதிகரித்துள்ளது. உயிரியலில் 842 சென்டம் குறைந்துள்ளது. அக்கெளன்ட்ன்சி, கணினி அறிவியல், எக்னாமிக்ஸ் பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளது.

Advertisement

நிறைய எக்னாமிக்ஸ் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்துள்ளதால் இந்த ஆண்டு பி.காம் போன்ற படிப்புகளுக்கு கட் ஆஃப் மார்க் அதிகரிக்கலாம் என்கின்றனர் கல்வியாளர்கள். பொறியயில் படிப்பை பொறுத்தவரை கட் ஆஃப் உயரலாம் என அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 25000 சீட் அதிகமாவதால் கடந்த ஆண்டை காட்டிலும் கட்ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பில்லை. அதே நிலைதான் தொடர வாய்ப்புள்ளது. அப்படியே இருந்தாலும் 195க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் குறையலாம்.

Advertisement

அதே போல் கால்நடை மற்றும் மீன்வளம் குறித்த படிப்புகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு வேதியலிலும், உயிரியலிலும் மதிப்பெண் குறைந்துள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண் 2 லிருந்து 4 குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் படிப்புகளில் கணிதம், கணினி அறிவியலிலும் சென்டம் அதிகமாக உள்ளது. வேளாண் படிப்புகளில் கட் ஆஃப் மதிப்பெண் குறையக்கூடும். கணினி அறிவியல் மாணவர்களுக்கு வேளாண் படிப்புகள் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement