பாடகி பி. சுசீலாவுக்கு கெளரவ பட்டம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், சுசிலா ரசிகராக மாறி அவர் பாடலை பாடி அசத்தல் - வீடியோ
இசையரசி என்றழைக்கப்படும் பி.சுசீலா தன்னுடைய தேனினும் இனிய குரலால். தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?", "தமிழுக்கு அமுதென்று பேர்", "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து", "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல", "ஆயிரம் நிலவே வா" , "பார்த்த ஞாபகம் இல்லையோ", "நான் பேச நினைப்பதெல்லாம்" உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார் இன்று வரை .சாதனை படைத்து வரும் இவருக்கு தற்போது தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா, இன்று காலை (21.11.2023) வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்ளும் கலந்து கொண்டார். இந்த விழாவில்தான் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது .பாடகி பி.சுசீலா தனது இருக்கையில் இருந்து எழுந்து வர முடியாத சூழலில் அவரது இருக்கைக்கு அருகில் சென்ற முதல்வர் முனைவர் பட்டத்தை வழங்கிய போது சுசீலா தடுமாறி கீழே விழச் சென்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட முதல்வர் அவரைத் தாங்கிப் பிடித்தார். அப்போது பி.சுசீலா முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
பட்டமளிப்பு முடிந்த பின் மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது என்று கூறிஉள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வர், நான் பி.சுசிலாவின் ரசிகர் இதனை இந்த மேடைக்கு வந்தவுடன் அவரிடம் வெளிப்படையாகவே கூறினேன். நான் காரில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது, அதிகமாக சுசிலாவின் பாடல்களை கேட்பேன் என்று கூறிவிட்டு, “நீ இல்லாத உலகில் நிம்மதி இல்லை” எனும் பி.சுசிலாவின் பாடலை மேடையிலேயே பாட்டி பாடினார் மு.க.ஸ்டாலின். இதனை கேட்டு அரங்குகள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
இதை அடுத்து முனைவர் பட்டம் பெற்ற பி.சுசீலா பேசிய பேசிய போது, "தமிழில் பாடிய பாடலுக்கு முதல் தேசிய விருது பெற்றபோது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். தற்போது அவருடைய மகன் கையால் நான் டாக்டர் பட்டம் பெறுகிறேன். முனைவர் பட்டம் முதல்வரிடம் பெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது .அவர் நிகழ்ச்சியில் பேசுவது கேட்டிருக்கிறோம். தற்போது அவர் பாடியது நன்றாக இருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் தாய் வாழ்த்து பாட எனக்கு வாய்ப்பு தந்தார். அதுவே தமிழ் மூலம் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு." என்றார்.