எஸ்பிஐ வங்கியில் கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பதவி!
பணி பாதுகாப்பு, ஊதியம் போன்ற காரணங்களால் வங்கி பணிகளுக்கு இளைஞர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. 48 கோடி வாடிக்கையாளர்களையும், 22,405 வங்கி கிளைகளுடன் செயல்படும் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வங்கி சேவை பிரிவில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை கோரியுள்ளது.அந்தவகையில், வாடிக்கையாளர் சேவை / விற்பனை ஆகிய பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பதவிக்கு 8283 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
20-28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு :
இடஒதுக்கீட்டு பிரிவினரான - பட்டியலின /பழங்குடி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் உண்டு.
தேர்வு முறை :
முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுகள் என்று ஆன்லைன் வழியாக இரு தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் :
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்- இல்லை. பொது/பிற்படுத்தப்பட்ட/பொருளாதார பின் தங்கிய பிரிவு-ரூ.750 தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். ஜனவரி 2024. ஆன்லைன் வழியாக முதல் நிலைத்தேர்வு நடைபெறும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில், இலவச பயிற்சியில் பங்கேற்க விருப்பம் என்று தெரிவித்தால், வங்கி ஏற்பாடு செய்யும் பயிற்சி மையத்தில் பங்கேற்கலாம். நவம்பர் 17, 2023 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
டிசம்பர் 7,2023 .
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு வழிக்காட்டி என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.