தெற்கு ரயில்வேயில் சிவில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு!
இந்திய ரயில்வேயின் கீழ் தெற்கு ரயில்வேயில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே இருந்து ஓய்வுபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
பணி விபரங்கள்
வயது வரம்பு
ரயில்வே இருந்து ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகபடியாக 65 வயது வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் என்னென்ன?
பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிகக் விரும்புகிறவர்கள் ரயில்வேயில் SSE & JE பதவியில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பதவியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் Auto CAD தெரிந்திருக்க வேண்டும். இந்தி தெரிந்திருந்திருக்க வேண்டும். மேலும் சிவில் பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் (JE) பதவியில் இருந்து ஓய்வுபெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்து விதிகளின் படி, மாத ஊதியம் அளிக்கப்படும். இதர கொடுப்பனைகள், அகவிலைப்படி ஆகியவை கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் உடல்நிலை மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்கள் முதலில் 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து தேவையில் அடிப்படையிலும் அல்லது 65 வயது வரையும் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் உள்ள இப்பணியிடங்களுக்கு விரும்பும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆந்தை ரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக வேண்டும். விண்ணப்பத்தில் தற்போதைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Assistant Personnel Officer/IR&Trg,
Headquarters Office,
Sounthern Railway,
Chennai - 600 003.
விண்ணப்பிக்க கடைசி நாள்
25.04.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
தெற்கு ரயில்வேயில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள முன்னாள் ரயில்வே ஊழியர்கள் தகுந்த தகவலுடன் உடனே விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.