சீனாவின் புதிய நிலவு திட்டம் தோல்வி!
நாம் வாழும் இந்த பூமியின் துணைகோள் நிலா. பூமி எந்தப் பக்கத்தில் சுற்றுகிறதோ, அதே பக்கத்தில்தான் நிலாவும் சுற்றுகிறது. இதன் காரணமாக அதன் மறுபக்கத்தை பூமியில் இருந்து நம்மால் காண முடியாது. நிலவை அடிப்படையாக வைத்தே மேற்கத்திய நாடுகள் நாள்காட்டிகளை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் தோன்றிய வானியல் சாஸ்திரங்களும் நிலாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன. ஏகப்பட்ட நூறு ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரகணங்களையும் இந்திய வானியல் சாஸ்திரங்கள் துல்லியமாக கணித்து கூறியுள்ளன. அந்த அளவுக்கு பூமிக்கும், நிலவுக்குமான நெருக்கமான தொடர்பு நீண்டு கொண்டே வருகிறது.
இதனிடையே முதன் முதலாக கடந்த 1972 ஆம் ஆண்டு நிலவில் கால்பதிப்பதற்கான அப்போலோ திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டராங் முதன்முதலாக கால்பதித்தார். அதற்குப் பின் 1976 ஆம் ஆண்டு ரஷ்யா ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்தது. கடைசியாக சந்திராயன் திட்டம் மூலம் இந்தியா நிலவில் கொடி நாட்டியிருந்தது. இப்படி அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் அதன் மேற்பரப்பு, ஈர்ப்பு விசை என பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், நிலவின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்ம் சூழலில் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளன.
இதனிடையே அதற்கு விடை காணும் வகையில் சீனா கடந்த 13 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பிய 2 செயற்கைக் கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நிலவில் ஆய்வு செய்வதற்காக டிஆர்ஓ-ஏ மற்றும் டிஆர்ஓ-பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் சிசுவான் மாகாணம், ஷிசாங் ஏவுதளத்திலிருந்து யுயன்ஷெங்-1 எஸ் ராக்கெட் மூலம் கடந்த 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டன.
இந்த நிலையில், ராக்கெட்டின் 3-ஆம் நிலை செயல்பாட்டில் தவறு ஏற்பட்டதால் அவற்றை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று ஷிசாங் ஏவுதள மையம் நேற்று அறிவித்தது. அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பிற செயற்கைக் கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால், அவற்றை விண்ணிலேயே அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சீனாவின் நிலவு ஆய்வு முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வியில் முடிவடைந்துள்ளது.