தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

01:18 PM Dec 08, 2023 IST | admin
Advertisement

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்திடுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டி தீர்த்து மழை என்பது 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கை பேரிடர் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement

இந்த பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர். மழைநீர் வடிவில் பணிகளை முன் கட்டிய திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால் தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது. அதேபோல அனைத்துத் துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வைத்திருந்தும் இணைந்து மக்களை காத்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சு நடைபெற்ற மீட்பு பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளின் அமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த இயற்கை பேரிடர்கள் இருந்த மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது

எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். அதனால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறேன். அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத காலம் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Chief Minister's Relief FundcmcyloneMichaungMK Sataintamilnadu
Advertisement
Next Article