தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

05:23 PM Mar 25, 2024 IST | admin
Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

Advertisement

இதையொட்டி மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

304 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12ந்தேதி முதல் 22ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு முடிவு மே 10ந்தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best!நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்’.என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Tags :
10th examcmMK Sataintn
Advertisement
Next Article