For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா -கொடி ஏற்றம் - வீடியோ!

01:04 PM Dec 18, 2023 IST | admin
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா  கொடி ஏற்றம்   வீடியோ
Advertisement

ர்வதேச புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் . ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவ பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம். திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.எனவே இந்த நாளன்று ஒவ்வொருவர் வீட்டிலும் களி செய்து சிவனுக்கு படைப்பது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

Advertisement

இந்த விழாக்களின் போது மூலவரான நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா திருவிழாவுக்கான கொடியேற்று விழா இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று காலை உற்சவ கொடிமரத்திற்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கோயில் வளாகத்தில் உள்ள உற்சவ கொடிமரத்தில் வேத, மந்திரங்கள் முழங்க உற்சவ ஆச்சார்யார் மீனாக்ஷிநாத தீட்சிதர் கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 26ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Advertisement

முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 27ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும் நடைபெற உள்ளது. பின்புமதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர். கடந்த ஓரிரு ஆண்டுகளை விட இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement