For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிக்லெட்ஸ் 2கே கிட்ஸ் – விமர்சனம்!

05:33 PM Feb 02, 2024 IST | admin
சிக்லெட்ஸ் 2கே கிட்ஸ் – விமர்சனம்
Advertisement

காதல் என்பதே இருக்கிறதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்வதில் மனித குலத்துக்கு இன்றுவரை குழப்பம்தான். அதே சமயம் அதிகம் புரிந்து கொள்ளப்படாத இன்னொரு அம்சம் காமம். காதலும் காமமும் ஒன்றா, இல்லை வெவ்வேறா, இல்லை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவையா என்றெல்லாம் கேள்விகள் உண்டு.இச்சூழலில் இந்த காதலும் காமமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், விவரம் தெரியாத வயதில் இரண்டிலும் சிக்கி மூழ்காமல், அதை கடந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு விஷயம் தெரியாதவர்களையும் காமத்தில் இப்படிப்பட்ட சந்தோஷங்கள் உண்டாக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் படமே சிக்லெட்ஸ் . அதாவது படம் ஆரம்பித்தது தொடங்கி எண்ட் கார்ட் வரை பலான சமாச்சாரங்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிட்டு, இறுதியில் அச்சச்சோ இதெல்லாம் இதெல்லாம் தப்பு, என்று சொல்லும் பாணியில் முகத்தை சுளிக்க வைத்து விடுகிறது,

Advertisement

கதை என்னவென்றால் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்டர், மஞ்சீரா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக வெயிட் செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நமக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது என்று எண்ணி இந்த மூன்று இளம் பெண்களும் தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். ஆனால் இந்த விஷயம் அந்த பெண்களின் வீட்டிற்கு எப்படியோ தெரிந்து விடுகிறது, அதன் பின்பு என்ன ஆனது என்பதே சிக்லெட்ஸ் .

Advertisement

ஹீரோக்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நாயகிகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ஆகியோர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்கள். அதிலும் ஹீரோயின்கள் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள். மன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது பிள்ளைகள் தடம்மாறி தடுமாறிப் போய்விடுவார்களோ என்கிற பதட்டத்திலேயே இருக்கும் இக்காலப் பெற்றோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இயங்கியிருக்கிறார் கேமராமேன் கொளஞ்சிகுமார். அவரின் கேமரா பெரும்பாலும் பெண்களின் உடலை சுற்றியே வலம் வருவதோடு, ரசிகர்கள் பெருமூச்சு விட வைக்கும் விதத்தில் அவர்களுடைய அங்கங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருந்தாலும் அங்கேயும் கவர்ச்சிக்கு தான் முன்னுரிமை கொடுத்திருப்பது சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் இருக்கிறது.

பாலமுரளிபாலுவின் இசை மோசமில்லை..

டைரக்டர் படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை ஈர்க்க நினைத்திருக்கிறார் .செக்ஸ் மற்றும் டபுள் மீனிங் டயலாக்குகளை ரசிப்பதற்கான தனி ரசிகர் வட்டம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி சொல்லாமல் முகம் சுழிக்கும் வகையில் சொல்லியிருப்பது பெரும் பலவீனம். அதிலும், பெண் பிள்ளைகள் என்றாலே இப்படிப்பட்ட பிரச்சனைகளுடந்தான் வளர்வார்கள்.., அதை பெற்றோர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும், என்ற கருத்தை வலிந்து திணித்து இள வயதினரை அவமரியாதை செய்திருப்பது பெரும் சோகம்.

மொத்தத்தில் சிக்லெட்ஸ் - தவிர்க்க வேண்டிய படம்

மார்க் 1.5/5

Tags :
Advertisement