தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை போக்குவரத்து மாற்றம்!

07:50 PM Feb 11, 2024 IST | admin
Advertisement

சிங்காரச் சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிக்காக இன்று முதல் (பிப்.11) அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலைகளில் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு விபரம்:

கீழ்கண்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பிப்.11 முதல் ஒரு வார காலத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

> சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கெனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

> இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்ஜிஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).

> அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி).

> வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு. G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.

மற்ற பிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்துக்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
changechennaimetro railTrafficWork
Advertisement
Next Article