தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை புழல் சிறை வேலைவாய்ப்பு!

08:54 PM Sep 05, 2024 IST | admin
Advertisement

சென்னையில் புழல் மத்திய சிறையில் உள்ள சமையலர், லாரி ஓட்டுநர் மற்றும் நெசவு போதகர் ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயதைப் பூர்த்தி செய்த 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் சமையலர் பணிக்கு 1 இடம், லாரி ஓட்டுநர் பணிக்கு 1 இடம், நெசவு போதகர் பதவிக்கு 1 இடம் என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Advertisement

வயது வரம்பு :

Advertisement

சமையலர் பதவிக்கு 01.07.2024 அன்று 18 வயதை பூர்த்தியடைந்தவராகவும், 34 வயது பூர்த்தியடையாதவராகவு இருக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர் பதவிக்கு 01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

நெசவு போதகர் பதவிக்கு 01.07.2024 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பள விவரம் :

சமையலர் பதவிக்கு நிலை - 2-இன் படி, ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

லாரி ஓட்டுநர் பதவிக்கு நிலை- 8-ன் படி, ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்

நெசவு போதகர் பதவிக்கு நிலை - 8-ன் படி, ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

சமையலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சமையலர் பணியில் குறைந்தது இரண்டு வருடம் சமையலர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர் பதவிக்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் ஓட்டுநர் பணியின் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நெசவு போதகர் பதவிக்கு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

சிறை கண்காணிப்பாளர்,
மத்திய சிறை - 1,
புழல் சென்னை - 66 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
தொலைபேசி எண் - 044 - 26590615.

விண்ணப்பிக்க கடைசி நாள் :

இப்பணியிடங்களுக்கு 13.09.2024 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைத்து விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Tags :
jobsPuzhal Prisonசிறைசென்னைபுழல்வேலைவாய்ப்பு
Advertisement
Next Article