தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை பிரஸ் கிளப் தேர்தல் நடக்கும் முன்பே ஜெயித்து விட்டேன்!

09:52 PM Dec 10, 2024 IST | admin
Advertisement

🦉From The Desk of ஆந்தை வி.குமார்!🔥

Advertisement

இன்னும் நடக்காத சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் ஆந்தை குமார் ஆகிய நான் ஜெயித்து விட்டேன்.. 💪

ஆம்.. நான் சொல்வதெல்லாம் நிஜ உண்மை.. 💯

Advertisement

என் வாழ்க்கையில் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் விகடன் குழுமத்தில் இணைந்த நான் எம்டி பாலு சாரிடம் ஒரே ஒரு முறை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் (அதுவும் மன்த்லி ரெம்யூனிரேஷன் கேட்டகிரியில் )வாங்கியுள்ளேன்,, ஆனால் டெர்மினேஷன் லெட்டர் ஏகப் பட்டவை வாங்கியுள்ளேன்.. ஒரு சூழலில் என் ரா.ர ரிப்போர்ட்டிங்கில் தன்னிச்சையாக அடித்தல், திருத்தல், பிற்சேர்க்கை எல்லாம் செய்த என் ஜூனியர் ஒருவர் செய்த குழப்பத்தை ஜீரணிக்க முடியாமல் டாட்டா காட்டினேன்

பின்னர் சன் டிவியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக பொறுப்பேற்று அப்போது மூன்றே மூன்று மணி நேரச் சேனலாக இருந்ததை 24 மணி நேர சேனலாக்கிய பெருமை எனக்கு மட்டுமே உண்டு.. அப்படி உருவாக்க என்னுடன் பாடுபட்டவர்களுக்காக தீபாவளி போனஸ் அல்லது முன் கூட்டி சம்பளம் கொடுங்கள் (அப்போது தீபாவளி மாச கடைசி வாரம் வந்தது) என்று 200 பேரிடம் கையெழுத்து வாங்கி ஒரு மனுவை எம்டியிடம் மனுவாக கொடுத்ததைக் கண்டு ஷாக் ஆகி என்னிடம் 'ஸாரி.. நீங்க விலகிடுங்க' என்று கேட்டுக் கொண்டதை அடுத்து விலகினேன்.

அது போல் ராஜ் டிவியில் எம்.ஜே.ரகு சார் அழைப்பின் பேரில் இணைந்தவன் போஸ்ட் புரொடக்ஷனில் ஸ்ட்ரிக் ஆபிசராகியதுடன், யூனிட் அனுப்ப ஏற்பட்ட வாகன பிரச்னைக்காக ஆட்டோவுக்கு சொந்த காசு போட்டு டீல் செய்தேன். அதைக் கண்டு மிரண்டு, குழம்பி எம்.டி.களில் ஒருவரான ரவி கேட்டுக் கொண்டதன் பேரில் அங்கிருந்தும் விலகினேன்..

இப்படி என் பயண அனுபவத்தில் சக ஊழியர்களுக்காக கைக் கொடுத்தாலும் மேனேஜ்மெண்டை எதிர்த்து பொய் கலர் கொடி தூக்க திட்டமிட்டவனில்லை நான்..

இவற்றை முடிந்தால் தமிழ் ஹிந்து ஆசிரியர் அசோகன், கலாநிதி மாறன், ராஜ் டிவி ரவி ஆகியோரிடன் இப்போதே மைக்குடன் போய் அல்லது போனில் ஸ்பீக்கர் போட்டு கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் .

கூடவே என் சகல குணங்களையும், பழக்க வழக்கங்களையும் என்னை விட நன்றாக கண்காணித்து வந்த அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஸ்ரீபால் மற்றும் டிஜிபி துரை ஆகியோர் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல் மொபைல் கேண்டீன் ரெடி செய்து சட்டரீதியான அனுமதியுடன் சென்னை மெரீனா, எழிலகம், பனகல் பார்க் ஆகிய பகுதிகளில் மிரட்டலாக நடத்தி என் வயிற்றுபாட்டை தணித்ததுடன் என்னை அந்நிலைக்கு ஆளாக்கிய விகடன் வளாகத்திற்குள் என் மாருதி ஃபாஸ்ட் புட்டை கொண்டு போய் நிறுத்தி விகடனில் அப்போது பணியில் இருந்த அத்தனைப் பேருக்கும் காசில்லா உணவு வழங்கியன் நான்.

இத்தனை செய்தாலும் இன்றும் வாடகை வீட்டில் ஊன்று கோல் உதவியுடன் மனைவி, மகனுடன் வாழ அன்றாடம் ஆன் லைனில் உழைத்து என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.. இச்சூழலில்தான் மேற்படி சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்ற சென்னை பிரஸ் கிளப் களேபரம், கருப்பு மை பூச்சு, கை மாறல், கபளீகரம் என்று போய் பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதைப் போல ஆணவ ஆட்டம் தொடங்கி வானரத் தூது அனுப்பியது வரை என்னைப் பாடுபடுத்தியப் போக்கு என் போன்ற சின்ன பையனை மிரட்டி விட்டது.. அதனாலேயே இந்த பேயாட்சி குழு வரும் முன்னரே வாங்கிய அடையாள அட்டை மற்றும் ரசீதுடன் என் உரிமையை மெடிக்கல் மாஃபியாக்களால் கொஞ்சூண்டு வளைந்து போன முதுகெலும்பை பகீரத பிரயத்தனம் செய்து நிமிர்த்தியபடி சில ஆண்டுகள் வர முடியாமல் போன ரிப்போர்ட்டர்களின் ஆலமரத்தடியான சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேரில் வந்து தலைவருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தேன்..

அதை அடுத்து எத்தனையெத்தனையோ தடைகளைத் தாண்டி வரும் ஞாயிறன்று டிசம்பர் 15ல் நடக்க இருக்கும் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் என் ஐடி கார்ட் பெயரிலுள்ள ஆந்தையார் என்பதை நீக்கி வெளியாகி விட்டது.. ஆனாலும் பட்டியலில் உள்ள வி.குமார் என்பது மட்டுமின்றி எனக்கு வி.கே. ., விக்கி, பிருத்விராஜ், அபராஜித், அனாமிகா, வி, நமது நிருபர், நமது கிரைம் நிருபர் என்று ஏகப்பட்ட நாமகரணங்க்களுடன் வி. சங்கர சுந்தர குமார் என்ற ஒரிஜினல் நேமும் உண்டு என்பது தனிக் கதை !

ஆக.. உண்மையான பத்திரிகையாளர் ஒவ்வொருவரும் நான் சொல்ல வருவதை புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. !கூடவே இத்தேர்தலிலும் களமிறங்கி நேரம் ஒதுக்கி விளம்பரம், வீடியோ பேட்டி, அது , இது இத்யாதி செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. மட்டுமின்றி மாஃபியாகள் மற்றும் கேரவன் வாசிகள் சூழ் ஊடகவாசிகளுடன் கோமாளியும் மோதும் களமிது. இவர்களுடன் போட்டி போட எனக்கு உண்மையில் கொஞ்சம் கூட நேரமில்லை, எனவே இத்துடன் என் சென்னை பிரஸ் கிளப் தேர்தல் கள பயணத்தை நிறுத்திக் கொள்கிறேன்..!ஏன் என்றால் இந்த தேர்தலில் என் அளவில் ஜெயித்து விட்டேன் அல்லவா?

அதனால் இனி யாருக்காவது நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்பினால் இந்த ஏழை மூன்று கால் பத்திரிகையாளனுக்கு ஓட்டுப் போடுங்கள். அதன் மூலம் உங்க வி.குமார் என்னும் ஆந்தையார் முதுகெலும்பு இன்னும் கொஞ்சம் நிமிரும்..!

அன்புக்கு நன்றி

✍️பிரியமுடன்

ஆந்தை வி.குமார்

Tags :
aanthaiyaarchennai press clubelectionmembershippresidentpressசென்னை பத்திரிகையாளர் மன்றம்தலைவர்தேர்தல்பிரஸ் கிளப்
Advertisement
Next Article