சென்னை பிரஸ் கிளப்= திமுகவின் கிளை அலுவலகமாகிறதோ?
ஒரு மாதமாக உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருந்த சென்னை பிரஸ் கிளப் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது..!ஒரு வாதத்திற்கு மூத்த உறுப்பினர் பத்திரிகையாளர் நிலாவேந்தன் அறிக்கைப் பலகையில் இருந்து அறிக்கையை அப்புறப் படுத்தியது தவறே என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதற்கு காவல் நிலையப் புகார், கைது என்பதெல்லாம் எல்லை மீறிய நடவடிக்கையாக இருக்கிறது.
புறாவுக்கெல்லாம் போரா எனும் வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
ஏன் சென்னை பிரஸ் கிளப் குறி வைக்கப்படுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதன்மையானது, சென்னை பிரஸ் கிளப் மட்டும் எவர் ஆட்சியில் இருந்தாலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும்போது, அதைக் கண்டித்தும் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இது இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கும், திமுக பத்திரிகையாளர் அணிக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது.
இந்தப் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர்களில் பாரதிதமிழன் முக்கியமானவர் என்பதால் அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டு இரவோடு இரவாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.
சரி.. நல்லபடியாக தேர்தல் நடந்தால் போதும் என்று மன்ற உறுப்பினர்கள் பலரும் அமைதியாக இருந்தார்கள்.
ஆனால் ஆளும் கட்சியின் துணையுடன் சென்னை பிரஸ் கிளப்பை முடக்கி, அதை சிலர் திமுகவின் கிளை அலுவலகமாக மாற்ற நினைப்பது வடிவேலுவின் மண்டை மேல் இருக்கும் கொண்டை போல் தெரிய ஆரம்பித்துவிட்டது..
ஒற்றுமையாக இருக்கும் அமைப்புகளை கட்சிகளை உடைத்து பிரித்துவிடுவது திமுக கையாளும் யுக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆகவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்த தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பொறுப்புணர்ந்து தேர்தலை நடத்த வேண்டுகிறேன்..