For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிட வாய்ப்பு!

08:32 AM Dec 31, 2023 IST | admin
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இளநிலை உதவியாளர்  ஓட்டுநர்  நுலகர்  உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிட வாய்ப்பு
Advertisement

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் நகரின் முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கலாசார அற்புதம், அதன் பிரமிக்க வைக்கும் வசந்த விழாவைக் காண ஏராளமான கூட்டத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் தமிழக அளவில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்பபட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இளநிலை உதவியார் , ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Advertisement

இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும், விரும்பமும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் ஜனவரி 27-ந் தேதி மாலை5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிட விபரம் மற்றும் சம்பளம்

Advertisement

இளநிலை உதவியாளர் – 1

கல்வித்தகுதி – 8-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசாங்கத்தில் அங்கீகரித்த அதற்கு இணையான கல்வித்தகுதி

சம்பள விபரம் – 15,900 முதல் 50,400 வரை

ஓட்டுநர் – 1

கல்வித்தகுதி - 8-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசாங்கத்தில் அங்கீகாரித்த அதற்கு இணையான கல்வித்தகுதி. இலக்கு ரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் கட்டாயம்.

சம்பள விபரம் : 18,500 முதல் 58,600 வரை

நூலகர் – 1

கல்வித்தகுதி – 10-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அதற்கு சமமான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி. நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருப்பது அவசியம்.

சம்பள விபரம் – 18,500 முதல் 58,600 வரை

உதவி மின் பணியாளர் – 1

கல்வித்தகுதி – மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமை வழங்கல் வாரியத்திடம் இருந்து எச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விபரம் – 16,600 முதல் 52,400 வரை

விண்ணப்பிக்கும் முறை :

mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப‎ படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘’இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Tags :
Advertisement