தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 செலுத்திப் பயணிக்கும் சலுகை திட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

07:37 PM Dec 02, 2023 IST | admin
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையைப் பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (03.12.2023) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை பயணிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

Advertisement

மேலும் மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்தியேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17.12.2023 அன்றும் பயணிகள் பயணிக்கலாம். மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.” என்று அறிவித்துள்ளது.

Tags :
chennai metro railconcession schemeextended by one more dayRs 5
Advertisement
Next Article