சென்னை மெட்ரோவில் சிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜாப் ரெடி!
சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்திற்கான விரைவான போக்குவரத்து அமைப்பாகும். இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ அமைப்பு சென்னையாகும். மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பேர்பட்ட சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :
உதவி மேலாளர் (சிவில்) – 8
வயது வரம்பு :
08.01.2025 தேதியின்படி, அதிகபட்சம் 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதேபோல் மாற்றத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்படும் உதவி மேலாளர் பதவிக்கு மாதந்தோறும் ரூ.62,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதுதவிர, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சிஃஎஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
10.02.2025
விரிவாக அறிய