For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கார்கள் திருடு போகும் இந்திய நகர பட்டியலில் சென்னைக்கு 2ஆம் இடம்!

02:00 PM Mar 13, 2024 IST | admin
கார்கள் திருடு போகும் இந்திய நகர பட்டியலில் சென்னைக்கு 2ஆம் இடம்
Advertisement

ம் நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு எப்படியாவது ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். கார் வாங்குவது மிகவும் விலை உயர்ந்த பொருளை வாங்குவதாகும். நீண்ட கால உழைப்பில் சேமித்து வைத்த பணத்திலோ அல்லது வாகனக் கடன் மூலமோ, ஏதாவது ஒரு வகையில் ஒரு காரை வாங்கிவிட வேண்டுமென்று விரும்பி ஒரு வழியாக கார் வாங்கும் அளவுக்கான நிதிநிலையை எட்டி கார் வாங்கி விடுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது.

Advertisement

அந்த வகையில் இந்தியாவில் பயணியர் வாகன மொத்த விற்பனை, கடந்த பிப்ரவரியில் 11 சதவீதம் அதிகரித்ததாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 பிப்ரவரியில் வாகன தயாரிப்பாளர்கள் , 3.34 லட்சம் பயணியர் வாகனங்களை, முகவர்களுக்கு தயாரித்து வழங்கி இருந்தனர்... !கடந்த மாதம், 3.70 லட்சம் வாகனங்களை தயாரித்து வழங்கி உள்ளனர். இதுதான், முந்தைய ஆண்டு டன் ஒப்பிடுகையில், 11 சதவீதம் உயர்வு.!..இப்படி இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருவது போல் கார்களை திருட்டுக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கார்களை பாதுகாத்து வைக்க அதன் உரிமையாளார்கள் ஹைடெக்கான பூட்டுகள் உள்ளிட்டபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இப்படி எத்தனை லாக் போட்டாலும் அத்தனையையும் கேஷூவலாக ஓப்பன் செய்து கார் திருட்டுக் கும்பல் கைவரிசையைக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

Advertisement

அந்த வகையில், அதிகளவில் கார்கள் திருடு போகும் இந்திய நகரங்களின் பட்டியலை, ’திருட்டு மற்றும் நகரம்’ என்ற தலைப்பில் அக்கோ காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை ஒட்டி அந்த நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2023 தரவுகளின்படி, டெல்லியின் பஜன்புரா மற்றும் உத்தம் நகர் அதிக கார் திருட்டு நடக்கும் பகுதியாக உள்ளது. குறிப்பாக, செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக வாகனங்கள் திருடு போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பெற்றுள்ளது. பெங்களூரு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.ிந்த நகரங்களை ஒப்பிடுகையில் ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைவு என்றாலும் கடந்த 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-ல் கார் திருட்டு இங்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள்தான்  இந்தியாவில் அதிகம் திருடப்படும் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது நினைவு கூறத்தக்கது. 2005ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள கார் திருடர்களிடையே மாருதி சுசுகி ஸ்விஃப்ட் தொடர்ந்து பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. இந்த காரின் ஈர்ப்பு, அதன் எரிபொருள் திறன், அழகியல், மலிவு மற்றும் மறுவிற்பனை மதிப்பினால் திருடர்களின் விருப்பமாக இந்த கார் இருக்கிறது. 1.2-லிட்டர், 4-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இக்கார், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. ஹேட்ச்பேக் காரான இதன் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை.

Tags :
Advertisement