தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

போகி புகையால் மூச்சு திணறும் சென்னை..! விமானங்கள் சேவை பாதிப்பு..!

10:27 AM Jan 14, 2024 IST | admin
Advertisement

பொங்கலுக்கு முதல் நாள் வீட்டிற்கு வண்ணமடித்து வீட்டை முழுவதும் தூய்மைப்படுத்தி வீட்டை அலங்கரிப்பார்கள். பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகை நாளானது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பழைய பொருட்களை மட்டுமல்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கிய எரிய வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும்.

Advertisement

இந்நிலையில் இந்த போகியை முன்னிட்டு சென்னையில் வழக்கம் போல் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்தில் கடும் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. மேலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது,, அதிகபட்சமாக மணலில் பெருங்குடியில் 277 என்ற அளவில் காற்று மாசுபாடு தரக்குறியீடு உள்ளது.

Advertisement

இதனை அடுத்து சென்னையில் பனி மூட்டத்துடன், புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. கடும் புகையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரி இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு சென்றது. தொடர்ந்து லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.அதோடு மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள், புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு மேல் விமான சேவை சீரடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஜெட் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
airportBhogichennaichennai fogclimatefestivalFIREFlightFogpollution
Advertisement
Next Article