அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்?
அரசு மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப் பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.. இதன் காரணமாகவே பலரும் தனியார் மருத்துவமனைக்குப் போய் பணத்தை கொட்டுகிறார்கள்.அரசு மருத்துவமனைக்கு வரும் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அவதி.. காத்திருப்பு என்று எரிச்சல் பலமடங்காகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அவர்கள் கோபம் மருத்துவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் திரும்புகிறது.
மறுபுறம்.. அதிக பணிச்சுமை.. ஓய்வு இல்லாமல் மருத்துவர்களும் பணியாளர்களும் அவர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை எரிச்சல்களை வரும் நோயாளிகள் மீது வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள். கத்திக் குத்துக்கு உள்ளான பாலாஜி அவர்களும் அப்படி வார்த்தைகளை விட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனாலயே அந்த பையன் மருத்துவர் மீது வெறிக் கொண்டு கத்தியால் குத்தியிருக்கிறான் என்று தோன்றுகிறது.
ஏழைகள் என்பதால் எல்லா நேரமும் எல்லோரும் எல்லா வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு செல்ல மாட்டார்கள். அவமானத்திற்குள்ளாகும் யாராவது இப்படி எதிர்வினையைக் காட்டும் துன்பம் நிகழ்ந்துவிடக்கூடும்.ஒரு மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்ற வெறி சாதாரணமாக ஒரு இளைஞருக்கு வந்திருக்க முடியாது. பையனின் செயல் மருத்துவரின் ஏதோ ஒரு அலட்சியத்திற்கு எதிரானதாக இருக்கலாம்.. !
அதற்காக இந்த தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.இந்த பிரச்சினையில் சும்மா செய்தி பரபரப்பிற்காக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு என்று நாலு நாள் பேசலாம்.. ஆனால் உண்மையான தீர்வு.. மருத்துவர்களின் எண்ணிக்கையையும் ஊழியர்கள் எண்ணிக்கையும்.. கூடவே பொதுமக்களிடம் கரிசணத்துடன் நடந்துக் கொள்ளும் பண்பை மருத்துவ பணியாளர்களுக்கு உருவாக்குவதே முழுமையாக தீர்வளிக்கும்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏதோ ஒரு வகையில் அரசும் பங்காளிதான். பையன் செய்த தவறுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அந்த பையனின் தாயார் மீது மருத்துவர்கள் வெறுப்பைக் காட்டாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப் படுத்த வேண்டும்.