சென்னை சிட்டிப் போலீஸ் புது கமிஷனர் அருண்-முழு பயோடேட்டா இதுதான்.
1998 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான அருண் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியர். சென்னையில் பி.இ மெக்கானிக்கல் படித்து விட்டு அதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத காவல்துறையை தன் வாழ்நாள் பணியாக தேர்வு செய்துகொண்டவர். அதற்கு காரணம், போலீஸ் டிரஸ் மீது அவருக்கு இருந்த காதல். அதனால்தான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து காவல்துறை மேலாண்மை படிப்பில் பட்டயம் பெற முடிந்தது.
ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடிந்ததும் அவருக்கு போஸ்டிங் கிடைத்த இடம் நாங்குநேரி. ஒரு சிறு பொறி பட்டாலே கலவரம் ஆகிவிடும் கந்தக பூமி. அங்குதான் ஏ.எஸ்.பியாக தன்னுடைய பணியை தொடங்கினார் . பின்னர் அதே மாதிரியான சூழல் கொண்ட தூத்துக்குடியிலும் அவர் சர்வீஸ் செய்ய வேண்டியிருந்தது. எஸ்.பியாக அவருக்கு பிரோமோஷன் கிடைத்ததும் கரூர், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றினார். அப்போதெல்லாம், சட்டம் ஒழுங்கிற்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் வெகுவாக பாராட்டப்பட்டது.
பின்னர் அவர் சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகு அண்ணாநகரிலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட் மாவட்டங்களிலும் DC யாக பணியாற்றினார். அப்போது எல்லாம், அவர் இரவில் எப்போது அழைப்பார், எங்கு சென்று ஆய்வு செய்வார் என்று பதறியபடியே காவல்நிலைய போலீசாரும், ரோந்து போலீசாரும் இருப்பர்.செயின்ட் தாமஸ் மவுண்டில் துணை போலீஸ் கமிஷனராக இருந்தபோது, பத்தாண்டுகளுக்கும் மேலாக பீரோ இழுக்கும் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இவர் குழுதான் கண்டறிந்தது. 500 சவரன் தங்கத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்த பெருமை இவருக்குண்டு.திருச்சி சரக டிஐஜி, சென்னை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு இணை ஆணையர், இரண்டு முறை திருச்சி மாநகர காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மட்டுமே ஒவ்வொரு முறையும் அரசுகள் அவரை பணியில் அமர்த்தியது.
ஏடிஜிபியாக அவர் 2022ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டப்போது தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு தலைவராகவும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த தாமரை கண்ணன் ஓய்வு பெற்றதை அடுத்து அதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த பதவியை திமுக அரசு அருணுக்கு கொடுத்து கவுரவித்தது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் ஏற்படும் குற்றங்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் எடுத்து வந்தார்.
பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு கட்டபஞ்சாயத்து செய்யும் தகவல்கள் அருணுக்கு வர, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் பிரச்னைகளில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண். அதோடு, அப்படி ஏதும் தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாவட்ட எஸ்.பியின் அனுமதியை பெற வேண்டும் என்று அவர் அனுப்பிய சர்குலர் பொதுமக்கள் வயிற்றில் பாலை வார்த்தது.
தகவல் :