சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!
சென்னை புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நடைபெறும். அந்தவகையில் 48-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.
மொத்தம் 900 அரங்குகளுடன் இந்த கண்காட்சி நடக்க இருக்கிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வாசகர்கள், மக்கள் பார்வையிட முடியும். புத்தக கண்காட்சியையொட்டி, ஓவியம், பேச்சு போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது.
வழக்கமாக புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து அதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாமல், வெறும் கண்காட்சி மட்டும் தொடங்கி வைக்கப்பட்டது.
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி அடுத்த மாதம் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அதாவது 17 நாட்கள் நடக்கிறது.
கண்காட்சியின் நிறைவு நாளான அடுத்த மாதம் 12-ந்தேதி மாலை 6 மணிக்கு 25 ஆண்டுகள் பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்கள், பொன்விழா, நூற்றாண்டு கண்ட பதிப்பகங்கள், கொடையாளர்கள், நிறுவனங்களை பாராட்டி சிறப்பு செய்யப்பட இருக்கிறது. அந்த நாளில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரங்க மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
பின் குறிப்பு:
காரை சில நாட்கள் எடுத்து வர வேண்டாம். பார்க்கிங் கொஞ்சம் கெடச்சல் தான்.
இன்னும் பல கடைகள் முழுமையாக தயாராகவில்லை. இன்னும் rack யே பல கடைகளில் வைக்கவில்லை.. முழுமையாக தயாரான அரங்கம் Sixth Sense, காலச்சுவடு, Zero Degree, nool vanam தான்.. பல புதிய புத்தகங்கள் அச்சில இருக்கு.. மை காஞ்சிக்கிட்டு இருக்கு என்று தான் சொல்கிறார்கள். அதெல்லாம் அடுத்த வாரம் தான் வருமாம்.!
முக்கியமா உச்சா போகனும்னா வீட்டிலேயே போயிட்டு வந்தரனும்.. !இங்கே வந்து அங்கே போனா ஹாஸ்பிட்டல் செலவு மினிமம் 20 ஆயிரம் ஆகலாம்...
-மேலும் புக் ஃபேர் நடக்கும் நந்தனம் ஒய் எம் சி ஏ -க்கு வெளியே மெயின் ரோட்டில் எதோ பறக்கும் சாலை பணிகள் நடப்பதால் புத்தகக் காட்சி தாண்டி சாலை குறுகலாக இருக்கிறது.. இரவு 8மணிக்கே அந்த இடம் Traffic jam ஆகி விடுகிறது.. புக் போர் முழுமையா இயங்கினால்.. நூடுல்ஸ்தான்.. ஆக.. முன்னாடியே வந்து முன்னாடியே போயிடுங்க..