தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சந்திரசேகர ராவ் : 48 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை - தேர்தல் ஆணையம் அதிரடி!

08:56 PM May 01, 2024 IST | admin
Advertisement

தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கே.சி.ஆர். பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து இழிவான வகையில் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் சில தினங்கள் முன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து சந்திரசேகர ராவ் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. இதற்கு கேசிஆர் தரப்பில் விளக்கம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது. அவர் அளித்த பதிலில், தனது வார்த்தைகளை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்து இருந்தார்.மேலும் அதிகாரிகளுக்கு உள்ளூர் பேச்சு வழக்கு புரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் சில கருத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதை புகாராக தெரிவித்து உள்ளதாகவும் கூறி இருந்தார். மேலும், அவர் கூறிய கருத்துகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு சரியாக செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வியை மட்டும் தான் குறிப்பிட்டதாகவும், ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட புகாரில் பல சொற்கள் திரித்து வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

Advertisement

ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தனது உத்தரவில், “தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஏப்ரல் 5, 2024 அன்று சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரசேகர ராவ் வெளியிட்ட அவதூறான கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரின் தவறான நடத்தைக்காக சந்திரசேகர் ராவை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள்காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு சந்திரசேகர ராவ் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நேர்காணல்கள், ஊடகங்களில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரைவில் தெலங்கானா மக்களவை தேர்தல் நடைபெற நிலையில் கேசிஆர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஆளுங் கட்சி கண்டு கொள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Tags :
48 hoursBan on campaigningChandrasekhara RaoElection Commission of India
Advertisement
Next Article