For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு தலைவலியாக இருப்பார்!

01:34 PM Jun 06, 2024 IST | admin
சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு தலைவலியாக இருப்பார்
Advertisement

ன்று இவர்தான் உண்மையான கிங்மேக்கர் என்று சொல்லுவதை விட ரிங்மாஸ்டர் என்று சொல்லலாம். மனசாட்சியுடையவர் பயமறியாதவர் மதசார்பற்றவர். இவர் ஒருவர் போதும் பாஜகவின் கொட்டத்தை அடக்க. முதல் டிமாண்ட் சபாநாயகர் பதவி வேண்டும் என்று செய்திகள் வருகிறது. இது சரியான நகர்வு. ஜனநாயகம் தழைக்க சபாநாயகர் நடுநிலை வகிக்க வேண்டும். பத்தாண்டுகளாக அது இல்லை. விட்டு கொடுப்பார்களா இல்லையா..?

Advertisement

நிதிஷ் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சந்திரபாபு நாயுடு IS A TOUGH CUSTOMER. பாஜகவிற்கு தலைவலியாக இருப்பார் (thorn in the flesh). அவர்கள் விரும்பியதை எல்லாம் இனி செய்ய முடியாது.

Advertisement

2002ல் வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதே, குஜராத் கலவரத்தில் நாட்டிலேயே மோடியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமில்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உரக்க சொன்னவர் அப்போதைய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.

2013ல் பாஜகவின் அகில இந்திய பிரச்சாரக் குழுவின் தலைவராக மோடி அறிவிக்கப்பட்ட போது, பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததோடல்லாமல், இந்தியாவில் ஒரு மதச்சார்பற்றவரே பிரதமராக வரவேண்டும் என்று முழங்கியதும் இதே சந்திரபாபு நாயுடு தான்.

ஆந்திராவின் தலைநகரம் அமராவதியா விஜயவாடாவா என்பதற்கும் விடை கிடைத்துவிட்டது என்பதால் மக்கள் பெருமூச்சு விடுகிறார்கள். இதற்கும், பின் தங்கியுள்ள தம் மாநிலத்திற்கு பத்து ஆண்டுகளாக பாஜக மறுத்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை வழங்கி, தங்கு தடை இல்லாத பெருவாரியான நிதி உதவி செய்ய வேண்டும் என்பதே இவருடைய முக்கிய கோரிக்கையாகும்.

என்ன செய்யும் பிஜேபி? பார்ப்போம்!

Tags :
Advertisement