தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சண்டிகர் - மேயர் தேர்தலில் மோசடி-ஆம் ஆத்மி & காங்கிரஸ் ஐகோர்ட்டில் வழக்கு- வீடியோ!

06:56 PM Jan 30, 2024 IST | admin
Advertisement

ண்டிகரில் இன்று காலை .மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

Advertisement

சண்டிகர் மாநகராட்சியில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சேர்ந்து மொத்தம் 20 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரி இதில், 8 வாக்குகள் செல்லாது என்று கூறிய நிலையில் 16 வாக்குகளை பெற்ற பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேயர் தேர்தலில், பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், உரிய தேர்தல் நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து டெல்லி  ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, பாஜக வெற்றியை எதிர்த்து பஞ்சாப் – ஹரியானா ஐகோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குலதீப்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். நாளை வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, காங்கிரஸ், ஆம் ஆத்மியின் 8 வாக்கு சீட்டுகளில் திருத்தம் செய்து தேர்தல் அதிகாரி செல்லதாகிவிட்டார் என குற்றசாட்டியுள்ளனர். காங்கிரஸும், ஆம் ஆத்மியும் 20 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்த நிலையில், 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Video-2024-01-30-at-6.15.17-PM.mp4

அதாவது, திட்டமிட்டே வாக்கு சீட்டுகளில் தேர்தல் அலுவலர் திருத்தம் செய்து செல்லாது என அறிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி அமித் பாண்டே, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
aam aadmi partyCase in CourtChandigarhCongress party!fraudMayor ElectionVideo
Advertisement
Next Article