For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு_ சுப்ரீம் கோர்ட் காட்டம்!

08:31 PM Feb 05, 2024 IST | admin
சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு_ சுப்ரீம் கோர்ட் காட்டம்
Advertisement

ண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சிதைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார். ஜனநாயகம் இப்படியே கொலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது. இது ஜனநாயகத்தை கேலி செய்யும் செயல். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து வாக்குச் சீட்டுகள், வீடியோ பதிவுகளை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பிப்ரவரி 7ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது பெரும் டிபேட்டை ஏற்படுத்தியுள்ளது..

Advertisement

அணமையில் சண்டிகர் கார்ப்பரேஷன் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜக-வை எதிர்த்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இண்டியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனலா்16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 12 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டாம் என்றும் அறிவித்தனர்.

Advertisement

இதை அடுத்து மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், மேயர் தேர்தலிலேயே இவ்வாறு முறைகேடு செய்கிறார்கள் என்றால், சட்டப்பேரவை,மக்களவைத் தேர்தல்களில் என்னவெல்லாம் செய்வார்கள் என்றார். அதிகாரத்திற்காக அவர்கள் நாட்டையே விற்கவும் செய்வார்கள், எனவே அவ்வாறு செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது. நாட்டையும் ஜனநாயகத்தையும் நாம் காப்பாற்றியாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும்மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகவும் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் சண்டிகர் ஐகோர்ட்டி; ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் ஐகோர்ட் பாஜக வெற்றி பெற்ற சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம், காவல்துறை, மேயர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதை அடுத்து சண்டிகர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தலை நடத்தும் விதம் இதுதானா என்று சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் , சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காட்டமாக தெரிவித்தது. வாக்குச்சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தியது தில்லுமுல்லு என்று வெளிப்படையாக தெரிகிறது. எனவே ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். இந்த சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதை பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம் என்று குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் , தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Tags :
Advertisement