For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சண்டிகர் மேயர் தேர்தல்: மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

05:37 PM Feb 20, 2024 IST | admin
சண்டிகர் மேயர் தேர்தல்  மீண்டும் வாக்கு எண்ணிக்கை  நடத்த உத்தரவு
Advertisement

ண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என்றும் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச்சீட்டுகளை செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதிவான 8 ஓட்டுகள் செல்லும் எனவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவி்ட்டுள்ளது.

Advertisement

சண்டிகர் மாநகராட்சிக்கு நடந்த மேயர் தேர்தலின் போது பாஜகவுக்கு 16 வாக்குகளும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதை எதிர்த்து பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க கோரப்பட்டது. ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால் சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அங்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை இன்று நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த 18ம் தேதி இரவு பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 2வது நாளாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 8 செல்லாத வாக்குச் சீட்டுகளுடன் தொடர்புடைய வீடியோக்களை ஆய்வு செய்தது. விசாரணையின் போது, வாக்குச்சீட்டில் நடந்த முறைகேட்டை தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் ஒப்புக் கொண்டார். அவரது செயலுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார் என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி என தெரிவித்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை செல்லாததாக தேர்தல் அதிகாரி மாற்றி உள்ளார். எனவே சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என்றும் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச்சீட்டுகளை செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தது.

"சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரியால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லுபடியாகும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.

Tags :
Advertisement