For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள்-ஐசிசி முடிவு!

08:00 PM Dec 23, 2024 IST | admin
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் ஐசிசி முடிவு
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானில் நடைபெறும் பட்சத்தில் அப் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று மறுத்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த தேர்வு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

Advertisement

"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு நடுநிலையான இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யுஏஇ) தேர்வு செய்துள்ளது" என பிசிபி செய்தித் தொடர்பாளர் அமீர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடுநிலையான இடம் தேர்வு முடிவு குறித்து பிசிபி ஐசிசிக்கு முறையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். இதன்படி அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 2025 உட்பட 2027ம் ஆண்டு வரை வரவிருக்கும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகள் நடுநிலையான மைதானங்களில் நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக வாரியம் உறுதிப்படுத்தியது.

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 (பாகிஸ்தான் நடத்துகிறது), பிப்ரவரி மற்றும் மார்ச் 2025ல் விளையாடப்படும். உலகக் கோப்பை 2026 (இந்தியா மற்றும் இலங்கை நடத்துகிறது). மேலும் இந்த முறை 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கும் பயன்படுத்தப்படும். அதன் ஹோஸ்டிங் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement