தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் - மத்திய அரசு அறிவிப்பு

01:10 PM Dec 12, 2023 IST | admin
Advertisement

ண்மையில் நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் பெயர் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய தண்டனைச் சட்டம்; குற்றவியல் நடைமுறை சட்டம்; இந்தியச் சான்று சட்டம் ஆகியவற்றினுடைய பெயர்கள் இந்தியில் மாற்றம் செய்யும் முடிவை, திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள்ளார்.

Advertisement

இந்தியாவில் தண்டனை வழங்குவதற்கும், விசாரணை முறைமைகளுக்கும் ஐபிசி என்றழைக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சட்டங்கள், இன்றளவும் நடைமுறையில் உள்ளன. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச்சட்டம் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சட்டங்களில் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் மூலம் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் இந்த சட்டங்களை பெயர் மாற்றம் செய்யவும், இதில் உள்ள சில ஷரத்துகளை மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்தது.

Advertisement

இதன்படி இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து அறிவித்தார். அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்‌ஷ்யா ஆகியவை என கடைபிடிக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த மசோதாக்கள் அறிவித்துள்ளன.

இந்த சட்டங்களின் பெயர்கள் மட்டுமின்றி, பல அடிப்படை கூறுகள், அடிப்படை அமைப்புகளும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த மூன்று சட்டங்கள்தான் ஒரு நபரை கைது செய்வது, அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களை கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது என்று பல விஷயங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது.

முக்கியமாக இந்திய தண்டனைச் சட்டம் இந்தியா முழுக்க போலீஸார் மூலம் பயன்படுத்தப்படும் சட்டம் ஆகும். ஆனால் இப்போது இதை மொத்தமாக மாற்றி அமித் ஷா மசோதா கொண்டு வந்துள்ளதால், இனி ஐபிசி குற்றப்பிரிவு என்ற சொற்றொடர் இருக்காது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த மசோதாவை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இச்சட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாகவும், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுடன் இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags :
Amit ShahCentreNew DraftsReplaceThree Criminal Law BillsUnion Home MinisterWithdraw
Advertisement
Next Article