தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'கொலிஜியம்' பரிந்துரைகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசின் போக்கு சரியில்லை "; சுப்ரீம் கோர்ட் அப்செட்!

08:28 PM Nov 07, 2023 IST | admin
Advertisement

ல கட்ட ஆய்வுக்கு பின்னர் குறிப்பிடும் நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரையில் ஒரு சிலரை மட்டும் நியமித்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி அரசின் இந்தப் போக்கு ஏற்புடையதாக இல்லை.. இது நீதித்துறை மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை குறைக்கும் வகையில் அமைந்து விடும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement

மாநில ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆகியோரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வர் . அந்த கொலிஜியம் அமைப்பின் பரிந்துரையானது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய சட்டத்துறை அதில் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். அவர் ஒப்புதல் பெற்ற பின்னர் பணி நியமனம் செய்யப்படும்.இப்படியான பரிந்துரை மற்றும் நியமனம் குழப்படி மற்ரும் தாமதமாகும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

India flag and golden scale with a judge's gave

அந்த வகையில் இன்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதஷ்ணு துலியா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்அமர்வு முன்பு நடைபெற்ற பொதுநல வழக்கு ஒன்றில் இந்த விவகாரம் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது இந்த நடைமுறைகள் குறித்து நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு அதிருப்தியை தெரிவித்துள்ளது. கொலீஜியம் சில பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. ஆனால அதில் ஒரு சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிலரை அங்கீகரிக்காமல் அப்படியே கிடப்பில் வைத்து விடுகிறார்கள். இது நீதித்துறை மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை குறைக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும்,சில நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அதை கொலீஜியம் அனுமதிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கு (மத்திய அரசு) சம்மதமா.? உங்கள் முடிவின்படி, யாரோ ஒருவர் நீதிபதியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், நாங்கள் அதனை ஏற்கவில்லை.

Advertisement

ஏற்கனவே, பஞ்சாப் , ஹரியானா ஐகோர்ட்டுக்கு கொலிஜியம் 5 நீதிபதிகள் பெயரை பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு 3 நீதிபதிகள் பெயரை தான் அங்கீகரித்தார்கள் என ஒரு சில உதாரணங்களையும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கிறோம் என மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். வழக்குரைஞர் வெங்கட ரமணி அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு பரிகாரம் காணாவிட்டால் இந்த நீதிமன்றம் அல்லது கொலிஜியம் ஒரு கசப்பான முடிவை எடுக்க வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதுவரை 14 நீதிபதிகளின் பெயர் நிலுவையில் இருப்பதாகவும் மீண்டும் வலியுறுத்திய பின்னரும் 5 நீதிபதிகளின் பெயர் தொடர்ந்து நிலுவையில் இருப்பதையும் அந்த உத்தரவில் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கானது நவம்பர் 20ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
centralCollegiumGovtJudges PostingrecommendationsSupreme Courttendency to ignoreupsetwrong
Advertisement
Next Article