தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

05:51 PM Nov 21, 2024 IST | admin
Advertisement

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி ஆங்கிலம், 20-ம் தேதி அறிவியல், 27-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும். மார்ச் 10-ம் தேதி கணிதம், 13-ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 21-ம் தேதி இயற்பியல், 24-ம் தேதி புவியியல், 27-ம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது. ஆக 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18–ம் தேதியும், 12–ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்த விரிவான அட்டவணையை சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in மாணவர்கள் பார்க்கலாம். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, 86 நாட்களுக்கு முன் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிடுவது இதுவே முதல்முறை.

Tags :
12thcbseClass 10thGeneral Examschedule
Advertisement
Next Article