தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் வெளியானது!

12:48 PM May 13, 2024 IST | admin
Advertisement

சிபிஎஸ்இ என்னும் :மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்; சிபிஎஸ்இ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

நாடெங்கிலுமுள்ள சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன www.cbse.gov.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்தாண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் சற்றே அதிகரித்திருக்கிறது.

Advertisement

இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.65% அதிகம் ஆகும். 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதியிருந்தனர்.24,000 மாணவர்கள் 95% மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக மாணவிகள் 91.52 சதவீதமும், மாணவர்கள் 85.12 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65 சதவீத மாணவ, மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.நிறுவன வாரியாக CTSA 99.23 சதவீத மாணவர்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து JNV களில் இருந்து 98.90 சதவீதமும், KV களில் இருந்து 98.81 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் முறையே 91.42 சதவீதம் மற்றும் 88.23 சதவீதம். தனித்தேர்வுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.70.

தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?

மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்திபதிவு எண் ('Enter your Roll Number’), பள்ளியின் பெயர் (Enter School No.), அட்மிட் கார்ட் ஐ.டி. (Enter Admit Card ID) ஆகிய விவரங்களை பதிவிட்டு முடிவுகளை காணலாம்.

https://cbseresults.nic.in/

https://cnr.nic.in/ResultDir/class_xii_a_2024/ClassTwelfth_c_2024.htm

https://www.digilocker.gov.in/

https://results.gov.in/

Tags :
2cbseexamResults Released!
Advertisement
Next Article